சுழலும்வரை பூமி உழைக்கும்வரை சிலர் எடுத்துக்காட்டாகவே வாழ்வார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜானகி நீலமணி. பத்திரிகையாளராக இருந்ததுடன் சிறுகதை, நாவல், குழந்தைகள் இலக்கியம் போன்ற தடங்களில் முத்திரை பதித்த எழுத்தாளரான நீலமணியின் மனைவி ஜானகி. இவரும் எழுத்தாளர்.
84 வயதான ஜானகிக்கு இரண்டு மகள்கள், பேரன் பேத்திகள் இருக்கின்றனர். ஆனாலும் “என்னைக் காப்பாற்றுபவை இந்தப் புத்தகங்கள்தான்" என்று நூலகப் புத்தகங் களைக் காட்டுகிறார்!
பிறப்பால் மலையாளியான ஜானகிக்கு கணவர் மூலமாகவே தமிழ் அறிமுக மானது. கற்ற தமிழைக் கொண்டு 40க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ‘கடலைத் தேடாத நதி’ என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். அவருடைய முயற்சியைப் பாராட்டி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை ஜானகிக்கு வழங்கினார். அந்தப் பரிசளிப்பு விழாவில் “தமிழை வளர்க்க உதவ வேண்டும்” என்று ஜானகியிடம் கருணாநிதி கூறினாராம். “என் வாழ்நாள் முழுவதும் அதைக் காப்பாற்றுவேன். அதனால்தான் முழுக்க முழுக்க தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே கொண்ட நூலகத்தை நடத்திவருகிறேன். முன்னாள் முதல்வர் ஜெய லலிதா எனக்கு வாழ்நாள் பென்ஷனையும் தமிழகம் முழுவதும் செல்வதற்கான இலவச பேருந்து பாஸையும் அளித்தார்” என்கிறார்.
“தினமணி பத்திரிகை யில் 26 ஆண்டுகள் உதவிஆசிரியராகப் பணியாற்றியவர் என்னுடைய கணவர் நீலமணி, ஓய்வுக்குப் பின் லியோ வாடகை நூல் நிலையத்தை வைத்துக் கொடுத்தார். அவரின் மறைவுக்குப் பின், அவர் எழுதிய ‘அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்’, ‘தந்தை பெரியார்’, ‘சமத்துவபுரம் தந்த கலைஞர் டாக்டர் மு.கருணாநிதியின் கதை’ ஆகிய மூன்று வாழ்க்கை வரலாறுகளையும் லியோ பதிப்பகம் சார்பாக புத்தகமாக வெளியிட்டுள்ளேன்” என்றார் ஜானகி.
30 ஆண்டுகளுக்கும் மேலாக மந்தைவெளி மார்க்கெட் சாலையில் லியோ வாடகை நூல் நிலையம் செயல்பட்டுவருகிறது. உறுப்பின ராவதற்குக் கட்டணம் நூறு ரூபாய் மட்டுமே. புத்தகங்களைப் படிப்பதற்கான வாடகை ரூபாய் 5 முதல் 10.
இப்போதெல்லாம் படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறதே என்று கேட்டால், “அப்படியெல்லாம் இல்லை... படிப்பவர்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்னுடைய நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்” என்று நம்பிக்கையுடன் சிரித்தபடி கூறுகிறார் ஜானகி நீலமணி. கரோனா தொற்று, மழை-வெள்ளம் என எல்லா இடர்களையும் கடந்த சிரிப்பு அது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago