கர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள்

By வா.ரவிக்குமார்

‘‘பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் முன்னேற்பாட்டு முயற்சியாகத்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யப்படும் பரிசோதனை முடிவுகளின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், எல்லா புறக்கணிப்பையும் சந்திப்பது பெண்கள்தான்" என்று புதிய பார்வையை முன்வைக்கிறார் டாக்டர் ஷியாமளா நடராஜன்.

ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் `மக்கள் நலம்’ என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர் ஷியாமளா. சமூகத்துக்குப் பயனளிக்கும் பல விஷயங்கள் அந்த ஆய்வில் இருந்தாலும், கர்ப்பிணிகளுக்குச் செய்யப்படும் எச்.ஐ.வி. பரிசோ தனைகள் குறித்த அவருடைய பார்வை அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செய்தவர். `சவுத் இந்தியா எயிட்ஸ் ஆக் ஷன் புரோக்ராம்’ என்னும் தன்னார்வ அமைப்பை நிறுவி அதன் மூலம் பாலியல் தொழிலாளர்கள், பார்வைத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள், ஒரு பால் ஈர்ப்புள்ளவர்கள் ஆகியோருக்கு எச்.ஐ.வி. விழிப்புணர்வை அளித்து வருபவர் ஷியாமளா. தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2006-ம் ஆண்டு பெற்றார்.

அவசிய பரிசோதனைகள்

"கருத்தரித்த பெண்களுக்குக் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப் படுவார்கள். ரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்து, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற எளிய பரிசோதனைகளில் தொடங்கி எச்.ஐ.வி. பரிசோதனையும் கட்டாயம் செய்ய வேண்டும்.

இதன்மூலம், கர்ப்ப காலத்திலேயே தாய்க்கு ஏதாவது நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அது குழந்தையைப் பாதிக்காமல் தடுக்க மருத்துவ உதவி அளிக்கப்படும். மருத்துவப் பரிசோதனையின்போது தாயின் ரத்தத்தில் ஏதாவது நோய்த் தொற்றுக் கிருமிகளோ அல்லது எச்.ஐ.வி. கிருமிகளோ இருப்பது கண்டறியப் பட்டால் அது குழந்தைக்குப் பரவாமல் தடுக்க வழிவகை செய்யப்படும்.

பெண்களுக்குப் பாதிப்பு

ஆனால், இதன் இன்னொரு பக்கத்தில் இப்படிப்பட்ட பரிசோதனையின்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள் மட்டுமே. மருத்துவச் சோதனையின் முடிவில் எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கிறது எனத் தெரியவரும்போது, அப்பெண்ணின் எதிர்காலம் வேதனை அளிக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. அதற்கடுத்து எல்லா புறக்கணிப்பையும் வாழ்நாள் முழுக்க அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையும் இந்திய அரசும் கொடுத்திருக்கும் அறிக்கையில், பெண்ணின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டபின் பின்வரும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்பெண்ணிடம் எடுத்து விளக்கிக் கூறி, அவள் ஏற்றுக்கொண்ட பிறகே இத்தகைய பரிசோதனைகளைச் செய்ய லாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு இத்தகைய பரிசோதனைகளைச் செய்யப்போகிறோம் என்பது சொல்லப்படாமலேயே பல இடங்களில் செய்யப்படுகிறது.

என்னுடைய ஆய்வுக்காகப் பல பெருநகரங் கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், நாட்டின் பல பகுதிப் பெண்களிடம் நான் பேசியதில் தெரிந்துகொண்ட உண்மை இது.

இன்னும் சில கிராமங்களில், கர்ப்பிணிகளுக்கு அரசின் மூலம் கிடைக்கும் `முத்து லட்சுமி கர்ப்பிணி உதவித்தொகை’யைக் குறிப்பிட்டு, இந்தப் பரிசோதனைகளைச் செய்து கொண்டால் தான், இந்த உதவித்தொகை உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லி செய்யப்படுகிறதாம்.

சில நல்ல முடிவுகள்

பரிசோதனையின் முடிவு பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில், கணவன் மூலமாக மனைவிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக் கக்கூடும் என்பதால், தமிழகத்தில் ஆண்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது என்பதும் கூட்டுமருந்து சிகிச்சை அனைவருக்கும் அளிக்கப்படுகிறது என்பதும் ஆரோக்கியமான விஷயம். நாட்டில் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி பெண்களுக்கு 95 சதவீதம் முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாட்டு முயற்சிதான் இந்தப் பரிசோதனை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்யப்படும் பரிசோதனைகள், பெண்களின் பூரண சம்மதத்தோடு செய்யப்படவேண்டும். அது ஏன் என்பதும் முறையாக விளக்கப்பட வேண்டும். அத்துடன் கணவர்களுக்கும் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்யப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத்தான் என்னுடைய ஆய்வில் வலியுறுத்தியுள்ளேன்" என்ற ஷியாமளாவின் பேச்சில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த உண்மையான ஆதங்கம் வெளிப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்