தாய்ப்பாலை தானம் செய்யலாம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. இந்த எண்ணிக்கையை 2015-ம் ஆண்டுக்குள் 39ஆக குறைக்க வேண்டும் என்ற ஐ.நாவின் இலக்கை இந்தியா எட்டுமா என்பது சந்தேகமே. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று போதிய தாய்ப்பால் கிடைக்காதது. பெண்களின் ஊட்டச்சத்து பற்றி இந்தியாவில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆரோக்கியமான தாய்மார்களும் ஆரோக்கியமான குழந்தைகளும் நம் நாட்டில் குறைவாகவே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு தாய்ப்பால் வங்கி நல்லதொரு தீர்வாக உள்ளது.

தாய்ப்பால் தானம்

தாய்ப்பால் வங்கிகளில் தாய்ப்பாலைத் தானமாகப் பெற்று சேமிக்க முடியும். அது தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உணவாக அமையும். பிறந்து சில நாட்களில் குழந்தை இறந்தவர்கள், அதிகளவு தாய்ப்பால் சுரப்பவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆசியாவின் முதல் வங்கி

ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கி மும்பையில் உள்ள லோக்மாணிய திலக் மருத்துவமனையில் 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் தாய்ப்பால் வங்கிகள் பிரபலமாகவில்லை. தாய்ப்பாலைத் தானமாகக் கொடுப்பதற்கும், பெறுவதற்கும் மக்களிடையே நிலவும் தயக்கமே மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

ஒரு பெண்ணின் தாய்ப்பாலை மற்றொரு பெண்ணின் குழந்தைக்கு எப்படி கொடுப்பது, ஒரு குழந்தைக்குத் தேவையான பால்தானே ஒரு பெண்ணிடமிருந்து சுரக்கும் போன்ற கேள்விகள், தாய்ப்பாலைத் தானமாகக் கொடுப்பதைத் தடுக்கின்றன .

மூளை வளர்ச்சிக்குத் தாய்ப்பால்

பச்சிளங்குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் தர வேண்டாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. மாட்டுப்பாலை விட, தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தையின் மூளை வளார்ச்சி நன்றாக அமையும். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஊட்டச்சத்து கிடைக்காதவர்கள் ஆகியோருக்கு இது சாத்தியமாவதில்லை.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை பாத்திரத்தில் சுரந்து சேமிக்க முடியும். அறை வெப்ப நிலையில், அதிகபட்சம் ஏழு மணி நேரம் வரை இந்தப் பாலைச் சேமித்து வைக்கலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது யாரேனும் ஒருவர் அதை ஸ்பூனால் எடுத்து ஊட்டி விடலாம். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தாய்ப்பால் வங்கிகள் உதவியாக அமையும்.

தமிழகத்தில் தாய்ப்பால் வங்கிகள்

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது உலகத் தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஏழு தாய்ப்பால் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த வங்கிகளில் தாய்மார்களுக்கு நோய் எதுவும் இருக்கிறதா என்று முதலில் பரிசோதிப்பார்கள். ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது தாய்ப்பால் எடுத்துக் கொள்ளப்படும். சுமார் 20 டிகிரியில் குளிரூட்டப்பட்டு சேமித்து, தாய்ப்பால் வேண்டும் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது.

இத்தகைய வசதிகளை பயன்படுத்த, சமூகத்தில் நிலவும் தயக்கத்தை உடைத்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும்படி செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்