பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த வழக்காக இருந்தாலும் அதுவும் பாதிக்கப்பட்டவள் பெண்ணாகவே இருந்தாலும் இந்தச் சமூகம் அவளைத்தான் குற்றவாளியாக்குகிறது. எந்தவொரு சம்பவத்தை விவரிக்கும்போதும் ஒரு ஆணைப் பற்றி குறிப்பிடும்போது அவன் பெயரும் ஊரும் மட்டுமே இந்தச் சமூகத்துக்குப் போதுமானவையாக இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கு அப்படியில்லை. அவள் இன்னார், இந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதைத் தாண்டிப் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. திருமணமானவளா, எத்தனை குழந்தைகளின் தாய், கணவனோடு அனுசரித்து நடக்கிறவளா போன்ற மேலதிகத் தகவல்கள் அவசியம் தேவை. அவள் மற்றவர்களுடன் கலகலப்பாகப் பழகுவாளா, வேறு ஏதாவது தொடர்புகள் உண்டா என்ற தகவல்கள் கிடைத்தால் இன்னும் சுவாரசியம்.
சமீபத்தில் நடந்த ஆம்பூர் கலவரம் குறித்த செய்தியிலும் பவித்ரா என்ற பெண்ணைப் பற்றி குறிப்பிடும்போதே அவள் திருமணமானவள், ஒரு குழந்தைக்குத் தாய் என்று அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது. திருமணமானவள், அதுவும் ஒரு குழந்தைக்குத் தாய் இப்படிச் செய்யலாமா என்று கொதிப்படையச் செய்வதுதானே இதன் நோக்கமாக இருக்க முடியும்? அவளுடைய பிரச்சினைகள் என்ன, சூழல் என்ன என்பதைக் குறித்து இங்கே யாருக்கும் கவலையில்லை. ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இதை மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தின் வெளிப்பாடுகளே இப்படியான சித்தரிப்புகளுக்குக் காரணம். இந்தச் சம்பவத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகக் காவல் துறையும் அனைத்துக்கும் காரணம் பவித்ராவே என்ற ரீதியில் செய்தி பரப்பியதையும் பார்க்க முடிகிறது.
திருமணம் தாண்டிய உறவு சார்ந்த பிரச்சினை என்றால் சமூகத்தின் பார்வையே வேறு. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆணை ஏதோ பாதிக்கப்பட்டவர் போலவும், அவரை மயக்கித் தன் வலையில் வீழ்த்திய சதிகாரியாகப் பெண்ணையும் முன்னிலைப்படுத்துவார்கள். அந்தப் பெண் செய்த செயல் பெண்ணினத்துக்கே ஏற்பட்ட அவமானமாக எடுத்துரைக்கப்படும். அனைவருமே அந்தப் பெண்ணுக்கு எதிராக ஓரணியில் திரண்டு வசைபாடித் தீர்ப்பார்கள். அதில் ஆணின் பங்கு என்ன, சம்பவத்தின் பின்னணியில் நிகழ்ந்தது என்ன என்று நினைத்துப் பார்க்கவும் நேரமில்லாமல் அந்தப் பெண்ணை மட்டுமே குற்றவாளியாக்குவார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago