சூட்டைத் தணிக்கும் மந்திரம்

By செய்திப்பிரிவு

# வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பியதும் முகத்தைச் சுத்தமான துணியால் துடைத்துவிட்டுக் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

# வெயிலால் முகத்தில் படரும் கருமையைப் போக்க, 2 டீஸ்பூன் தயிரில் சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

# நிழலில் காயவைத்த ஆவாரம் பூவுடன் சம அளவு பயத்தமாவைச் சேர்த்துத் தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் நீங்கும்.

# பச்சைப் பயறுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து, அதைத் தண்ணீரில் குழைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம், வியர்க்குரு, உடலில் உப்பு பூத்தல் போன்றவை நீங்கும்.

# வெயிலில் அலையும்போது நாக்கு வறண்டு, தாகம் எடுக்கும். அதைத் தடுக்கச் சிறிதளவு கல்கண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.

# குடிப்பதற்கு மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கும்போது அதனுடன் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் சளிப் பிடிக்காது.

# கோடை காலத்தில் உணவில் புளிப்பு, காரம் இரண்டையும் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

# ஜூஸ் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்க்கலாம்.

# இளநீர் அல்லது தண்ணீருடன் வெந்தயப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

# 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியுடன் அரைக் கப் தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

- பிரேமா தியாகராசன், திருச்சி-21.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்