வி
ளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர் என்றாலே கொஞ்சம் வயதான, எளிதில் அணுக முடியாத கண்டிப்பான முகம்தான் பலருக்கும் நினைவுவரும். ஆனால், இருபத்தி மூன்று வயதிலேயே கிரிக்கெட் பயிற்றுநராக செயல்பட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் சென்னையைச் சேர்ந்த யுவஸ்ரீ.
பள்ளி நாட்களில் தடகளம், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகள் மீது இவருக்கு ஆர்வம் இருந்தது. கிரிக்கெட் பயிற்சியாளரான தன் தந்தை பாலச்சந்தருடன் கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்வது, அவருக்குத் தேவையான உதவிகள் செய்வது போன்றவற்றில் யுவஸ்ரீ ஈடுபட்டுவந்தார்.
ஒருநாள் கிரிக்கெட் மட்டையை எடுத்து விளையாடியபோது, தன்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை யுவஸ்ரீக்கு ஏற்பட்டது. தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்காக யுவஸ்ரீ நான்கு முறை விளையாடி இருக்கிறார். அவரது சிறப்பான ஆட்டத்துக்காகவே தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
தொடர் பயிற்சியால் அவரது வலது காலின் தொடைப் பகுதியில் உள்ள சதை உட்புறமாகக் கிழிந்து சேதமைடைந்தது. அதேபோல் தண்டுவடப் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இவை யுவஸ்ரீயை மனதளவில் பாதித்தன.
எந்தப் பயிற்சியும் எடுக்காமல் ஓர் ஆண்டுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் யுவஸ்ரீ.
மீட்டெடுத்த தந்தை
வீட்டில் இருந்த நாட்கள் யுவஸ்ரீக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தின. ஆனால் அவருடைய தந்தையின் நம்பிக்கை வார்த்தைகள் அவரை மீட்டெடுத்தன.
“நான் வீட்டில் இருந்தபோது அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு என் அப்பாவுக்கும் உடல்நிலை மோசமானது. சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பியதுமே என் அப்பா முதலில் செய்த வேலை கிரிக்கெட் மைதானத்துக்குப் போனதுதான். அந்த வயதில் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தபோதும் கிரிக்கெட் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் எனக்கு உத்வேகம் அளித்தது. இது நடந்து சில நாட்களிலேயே நானும் கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்று பயிற்சி எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன்” என்கிறார் உற்சாகமாக.
தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் உடனடியாக கிரிக்கெட் போட்டிகளில் யுவஸ்ரீயால் பங்குபெற முடியவில்லை. அதனால் கிரிக்கெட் பயிற்சியளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
ஒரு பயிற்றுநராகத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி பயிற்சி எடுத்துவருகிறார்.
“எனக்கு எல்லாமே கிரிக்கெட்தான். மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும்போது நானும் நிறைய கற்றுக்கொள்கிறேன். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் கிரிக்கெட் பயிற்றுநர் பயிற்சி எடுத்துக்கொள்ள விண்ணப்பித்திருக்கிறேன்.
கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பயிற்றுநர் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. என் உடல்நிலை தேறியதும் நிச்சயம் ஒருநாள் மாநில அணிக்காக மீண்டும் விளையாடுவேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.
படங்கள்: எல்.சீனிவாசன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago