போகிற போக்கில்: இருந்த இடத்திலேயே வருமானம்

By எல்.ரேணுகா தேவி

ர்வம் காரணமாகச் செய்யத் தொடங்கிய கைவினைப் பொருட்களுக்குக் கிடைத்த வரவேற்பால், அதையே ஒரு தொழிலாக மாற்றிவிட்டார் சென்னையைச் சேர்ந்த அபிராமி.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிறந்தவர் அபிராமி. சிறு வயதில் இருந்தே தன்னுடைய தாத்தா நகைப் பட்டறையில் நகைகள் செய்ததைப் பார்த்து வளர்ந்தவர். ஆனால், நகை செய்து பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது இல்லை. தோழி ஒருவருக்கு அவசரமாக நகை தேவைப்பட, அப்போது தனக்கு தோன்றிய வடிவத்தில் நகை செய்து கொடுத்துள்ளார் அபிராமி. அவசரமாகச் செய்தாலும் அபிராமி செய்துகொடுத்த நகையில் இருந்த நேர்த்தி, அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

09CHLRD_ABIRAMI_ அபிராமி

அன்று முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நவீன ஃபேஷன் நகைகள் செய்யத் தொடங்கினார். பின்னர் ஐ.டி. வேலைக்காகச் சென்னையில் செட்டில் ஆகிவிட்ட அபிராமி, வாரத்தின் இறுதி நாட்களில் பவளம், முத்து, ரூபி போன்ற கற்களில் கம்மல், முத்து மாலை, நெக்லஸ், ஆரம் போன்றவற்றைச் செய்கிறார்.

அந்த நகைகளின் நேர்த்தியும் வேலைப்பாடும் அலுவலக நண்பர்கள், தோழிகளிடம் எதிர்ப்பார்க்காத அளவுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

“என் தாத்தா சிற்பங்களையும் நகைகளையும் அற்புதமாக வடிப்பார். அவர் செய்யும்போது பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். தற்போது நிறைய ஆர்டர்கள் வருகின்றன. இதற்காக ஐ.டி. வேலையைக்கூட விட்டுவிட்டு, முழுநேரமாகக் கைவினைப் பொருட்களைச் செய்துவருகிறேன்” என்கிறார் அபிராமி.

முகநூல் மூலம் வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கும் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் நகைகளைச் செய்து தருகிறார் இவர். தான் செய்யும் நகைகளை விற்பனை செய்வதற்காகத் தனியாகக் கடை திறக்கும் திட்டமும் அவரிடம் இருக்கிறதாம்.

 

நகைகள் மட்டுமில்லாமல் காஞ்சிப் பட்டு, ஆரணிப் பட்டு, வெங்கடகிரி காட்டன் போன்ற உள்ளூர் தொழிலாளர்கள் நெய்யும் புடவைகளையும் விற்பனை செய்துவருகிறார். வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியேயும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துவருகிறார் அபிராமி.

படங்கள்:எல்.சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்