பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சென்னை சுரங்கப்பாதைகள்

By செய்திப்பிரிவு

சென்னையில் இருக்கும் பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் முக்கியமான நெடுஞ்சாலைகளில் பொதுமக்க

ளின் வசதிக்காக சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட இந்த சுரங்கப் பாதைகள், முறையாக பராமரிக்கப்படாததால் மக்கள் பெரிதும் சிரமப்பப்பட்டு வருகின்றனர்.

சில இடங்களில் மாலை நேரங்களில் சுரங்கப் பாதை வழியாக செல்லும் பெண்கள் மற்றும் முதியோரிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அவர்களிடையே அச்சம் நிலவுகிறது. ஆனால் இது பற்றி யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை.

உதாரணமாக, அண்ணாசாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள சுரங்கப் பாதையை தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று மின்தடை காரணமாக பகல் நேரத்திலேயே இந்த சுரங்கப் பாதை இருள் சூழ்ந்து காணப்பட்டது.இது குறித்து அந்த சுரங்கப் பாதை வழியாக வந்த இளம் பெண் ஒருவர் கூறியதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சுரங்கப் பாதை வழியாக இரவு 8.30 மணி அளவில் சென்றபோது என்னை எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞர் துரத்தினார். அவரிடமிருந்து தப்பி வந்தததே பெரிய விஷயம். போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் இந்த சுரங்கப்பாதையில் இச்சம்பவம் நடந்தது ஆச்சரியமாக உள்ளது.

அங்கு படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிகளில் விளக்குகள் எரியவில்லை. இன்றைக்கோ (வியாழன்) பகலிலேயே இருளாக உள்ளது. சுரங்கப் பாதைக்குள் நுழையவே பயமாகவே இருக்கிறது. எனவே, சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது, ‘‘இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தினமும் புகார் வந்து கொண்டு இருக்கிறது. இரவு நேரத்தில் ரோந்து போக உத்தரவிட்டுள்ளோம். போலீசாரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். சுரங்கப் பாதைகளின் முன்பகுதியில் எப்போதும் போலீசாரும் இருப்பார்கள். சுரங்கப் பாதைகள் வழியாக வரும் பொதுமக்கள் அங்குள்ள போலீசாரிடம் தகவல் கொடுத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்