வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: நேரில் பார்க்காமலேயே மீட்டிங்!

By காம்கேர் கே.புவனேஸ்வரி

ஸ்கைப்பின் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேசலாம். எழுத்து மூலம் உரையாடலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் சில நேரம் உங்களை நேரில் பார்த்துப் பேச விரும்பலாம். அதற்காக நேரில் வர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இருந்த இடத்திலிருந்தே ஸ்கைப் மூலம் உங்களுடன் உரையாடலாம். உங்கள் இணைய அலுவலகத்துக்குப் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையமாக ஸ்கைப்பைப் பயன்படுத்தலாம்.

என்னென்ன நன்மை?

1. ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் குரூப் சாட் செய்ய முடியும்.

2. நம் வாடிக்கையாளர்களை ஸ்கைப்பில் இணைத்துக்கொண்டுவிட்டால், அவர்களுடன் தேவையானபோது வீடியோ சாட் மூலம் பேசிக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களும் ஸ்கைப் அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும்.

3. மீட்டிங் குறித்த தகவல், தேதி, நேரம் இவற்றை இமெயில் மூலம் தகவல் கொடுத்துவிட்டு, அந்த நேரத்தில் அனைவருடனும் ஸ்கைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் செய்துகொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலம் அனைவருக்கும் நம் பிசினஸ் தயாரிப்புகள், சேவைகள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் சென்றடையும்.

4. ஸ்கைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கலாம். ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளைக் கற்றுத்தரலாம். பாட்டு, இசைக் கருவிகள், ஓவியம், கைவினைப் பொருட்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கலாம்.

ஸ்கைப் இலவசமா?

1. நம் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்கைப் மூலம் ஸ்கைப் தரவிறக்கம் செய்துள்ள மற்றொரு கம்ப்யூட்டரை அல்லது ஸ்மார்ட்போனைத் தொடர்புகொள்ளலாம். இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.

2. ஸ்கைப்பில் இரண்டு வகை. Skype for HOME, Skype for BUSINESS. நம் பிசினஸ் சிறிய அளவில் 25 வாடிக்கையாளர்களை மட்டும் பெற்றிருந்தால், Skype for HOME பயன்படுத்தலாம். இது இலவசம். 250 வாடிக்கையாளர்கள் வரை தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் Skype for BUSINESS பயன்படுத்தலாம்.

3. நம் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யப்பட்ட ஸ்கைப் மூலம் லோக்கல், இன்டர்நேஷனல் தொலைபேசி /அலைபேசி அழைப்புகளை ஏற்று அவற்றுக்குப் பதிலளிக்கும் முறைக்கு Skype In என்று பெயர். அதுபோல ஸ்கைப் தரவிறக்கம் செய்யப்பட்ட நம் கம்ப்யூட்டர் மூலம் லோக்கல், இன்டர்நேஷனல் தொலைபேசி / அலைபேசி அழைப்புகளைச் செய்வதற்கு Skype Out என்று பெயர். இவை இரண்டுக்குமே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படி டவுன்லோடு செய்வது?

www.skype.com இணையதளத்தில் Business என்பதை க்ளிக் செய்து, கட்டணம் செலுத்தியும், Download Skype மூலம் இலவசமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். யூஸர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

ஸ்கைப்பில் முதன் முதலாக அக்கவுன்ட் ஏற்படுத்திக்கொண்டு சைன் இன் செய்யும்போது, நாம் பயன்படுத்தும் வெப் கேமிரா, ஹெட்போன், ஸ்பீக்கரின் தன்மை போன்றவற்றைப் பரிசோதிக்கும் திரை வரும். அந்தத் திரையின் வழிகாட்டுதல்படி செயல்பட்டுக்கொண்டே வந்தால், நாம் மைக்கில் பேசுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் தானாகவே வெப் கேமரா, ஹெட்போனைச் சரிசெய்து கொடுக்கும்.

நட்பு அழைப்பு

1. ஸ்கைப்பின் ஸர்ச் பாரில் நண்பரின் இமெயில் முகவரியை டைப் செய்து, அவ ருக்கு நட்பு அழைப்பு கொடுக்க வேண்டும்.

2. நட்பு அழைப்பு விடுத்த நபர் நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு, Accept என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

சாட் செய்யும்போதே இவற்றையும் இணைக்கலாம்

ஸ்கைப்பின் சாட் விண்டோவில் உரையாடும்போது Send Photos, Send File, Send Contacts, Send Video Message போன்றவற்றை இணைத்து அனுப்ப முடியும்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்