அறிவோம் தெளிவோம்: கொடுமைகளை வேரறுப்போம்!

By யாழினி

உலகம் முழுவதும் பெண்ணுறுப்பு சிதைப்பால் (Female Genital Mutilation) இருபது கோடிக்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார அமைப்பு. பெண்ணுறுப்புச் சிதைப்பு, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா உள்ளிட்ட முப்பது நாடுகளில் சடங்காகப் பின்பற்றப்படுகிறது. இந்தச் சடங்கு இந்தியாவிலும் தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குச் செய்யப்படுகிறது.

பொதுவாக, இந்தச் சடங்கு ஆறிலிருந்து பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்குச் செய்யப்படுகிறது. இந்தச் சடங்கு செய்யப்படுவதற்குப் பின்னால் எந்த விதமான உடல்நலக் காரணங்களும் கிடையாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன், பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் உடல் நல பாதிப்புகளை இந்தச் சடங்கு உருவாக்குகிறது என்றும் சொல்கிறது. இந்தச் சடங்கைச் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாக அறிவித்திருக்கிறது உலக சுகாதார மையம்.

பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு எதிராக சமீபத்தில் இந்தியாவில் ‘சஹியோ’ (Sahiyo) என்ற தன்னார்வ அமைப்பு ஆன்லைன் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில் தாவூதி போஹ்ரா சமூகப் பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர். 385 பெண்கள் கலந்துகொண்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 81 சதவீதம் பேர் இந்தச் சடங்கை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களில் 82 சதவீதம் பேர் இந்தச் சடங்கைத் தங்களுடைய பெண்களுக்குச் செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

போஹ்ரா சமூகத்தில் ‘கத்னா’என்று அறியப்படும் இந்தச் சடங்குக்குப் பின்னால் பல காரணங்களை இந்தக் கருத்துக் கணிப்பில் பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள். மத வழக்கம், பெண்ணின் பாலியல் வேட்கையைக் குறைப்பது, பாரம்பரியம், தனிப்பட்ட சுகாதாரம் போன்றவற்றை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த மனிதத்தன்மையற்ற சடங்கிலிருந்து போஹ்ரா சமூகம் வெளியே வரவேண்டும் என்று பல இஸ்லாமிய அறிஞர்களும் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியவர் ‘சஹியோ’அமைப்பின் இணை நிறுவனர் பிரியா கோஸ்வாமி. இவர் 2012-ல் பெண்ணுறுப்புச் சிதைப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஏ பிஞ்ச் ஆஃப் ஸ்கின்’ ( A Pinch of Skin) என்ற ஆவணப்படத்தை எடுத்திருந்தார். இந்த ஆவணப்படம், பெண்ணுறுப்புச் சிதைப்பால் பாதிக்கப்பட்ட போஹ்ரா சமூகப் பெண்களின் வலியை அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தது. படித்த, நல்ல பணியில் இருக்கும் பெண்களும் இந்தச் சடங்கில் நம்பிக்கையிருப்பதாக ஆவணப் படத்தில் சொல்லியிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்தவிதமான மருத்துவப் பயிற்சியும் இல்லாமல் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெண்களால் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. அது எப்படிப்பட்ட ஆபத்தான விளைவுகளைப் பெண்களின் உடல்நிலையிலும் மனநிலையிலும் ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆவணப் படம் விளக்கியிருந்தது. பெண்ணுறுப்புச் சிதைப்புக்குப் பின்னால் இருக்கும் கொடுமையை ‘ஏ பிஞ்ச் ஆஃப் ஸ்கின்’ ஆவணப்படம் உரக்கப் பேசியிருந்தது.

பெண்ணுறுப்புச் சிதைப்பை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று ‘சஹியோ’ அமைப்பு தற்போது எடுத்துவரும் முயற்சிகளுக்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ஆவணப்படத்தைப் பார்க்க: >https://www.youtube.com/watch?v=eouLHP3cx8E

‘சஹியோ’ அமைப்பைப் பற்றி மேலும் தகவல்களுக்கு: sahiyo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

45 mins ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்