கோவை கிராஸ்கட் சாலையில் மூங்கில் குச்சிகளில் பல வண்ண பிளாஸ்டிக் வயர்களால் பின்னப்பட்ட கூடைகளைப் பார்க்கும்போது புதுமையாக இருக்கிறது. அந்தப் பக்கம் செல்பவர்கள் ஒரு நிமிடம் நின்று கூடைகளின் அழகை ரசித்துவிட்டுத்தான் கடக்கிறார்கள். சிலர் ஆர்வத்துடன் கூடைகளை வாங்கிச் செல்கிறார்கள். மூங்கிலையும் பிளாஸ்டிக் வயரையும் இணைத்துச் செய்யும் யோசனை எப்படி வந்தது என்று கூடை பின்னிக்கொண்டிருந்த விஜயாவிடம் கேட்டோம்.
“எனக்குச் சின்ன வயசுலேயே கல்யாணம் ஆயிருச்சு. என் புருஷன்தான் இந்தத் தொழிலை எனக்குக் கத்துக்கொடுத்தார். ஆர்.எஸ்.புரத்தில் எங்க ஆளுக அத்தனை பேரும் தெருவோரத்துல கூடை பின்னி வித்துட்டு இருப்பாங்க. நாங்களும் அதுல ஒண்ணாதான் இருந்தோம். திருமணத்துக்கான உப்புக் கூடை, அர்ச்சனை கூடை, விசேஷ வீடுகளுக்குத் தேவைப்படற விதவிதமான மூங்கில் கூடைகளைச் செய்து கொடுத்துக்கிட்டு இருந்தோம். அதுல பெருசா வருமானம் இல்லை. அந்த நேரத்துல எங்க ஆளுக குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் வயர் கட்டை எடுத்துட்டு வந்தாங்க. அதை மூங்கில் கூடையில் இணைச்சு பின்னிப் பார்த்தா என்னன்னு செஞ்சு பார்த்தாங்க. மூங்கிலோட இணைச்சு பின்னப்பட்ட அந்தக் கூடை செஞ்சு வச்சவுடனே வித்துருச்சு. அதுபோலவே செய்யணும்னு எங்க ஆளுகளும் அந்த வயருக்காகக் கடை கடையா ஏறி இறங்கி வாங்கி செய்ய ஆரம்பிச்சோம்” என்கிறார் விஜயா.
உள்ளூர் வியாபாரியிடம் வாங்குவதால் பிளாஸ்டிக் வயரின் விலை கட்டுப்படியாகவில்லை என்பதால் பெங்களூருவுக்கே சென்று மொத்தமாக பிளாஸ்டிக் வயர்களை வாங்க ஆரம்பித்தனர்.
“ஆரம்பத்துல நல்லாதான் விற்பனையாச்சு. ஒரு நாளைக்கு 40, 50 கூடைகள் வரை வித்துடுவோம். அளவைப் பொருத்து 70 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விலைபோகும். அப்போ விற்றதில் இன்னைக்கு மூணுல ஒரு பங்குகூட விற்கமாட்டேங்குது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூட்டம் கூடுற இடத்துல கடை பரப்புவேன். மத்த நாள்ல மூங்கில் கூடை செய்யப் போயிடுவேன். இப்ப பிளாஸ்டிக் பொருளைப் புறக்கணிக்கிறாங்களே, அதனாலதான் எங்க கூடைகளையும் வாங்க மாட்டேங்கிறாங்களோ?” என்று கேட்கிறார் விஜயா.
விஜயாவின் கணவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுடைய பத்துப் பிள்ளைகளில் ஐந்து பேர் பெரியவர்களாகி, தனியாகத் தொழில் செய்கிறார்கள். மீதி குழந்தைகளுக்கு இந்தக் கூடை முடைவுதான் பிழைப்புக்கு வழி செய்கிறது.
“என்ன செய்யறது? அவர் இருந்த வரைக்கும் என்னைக் கஷ்டப்பட விட மாட்டாரு. இப்ப தனியா குழந்தைகளைக் காப்பாத்த வேண்டியிருக்கு” என்கிறார் விஜயா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago