உங்கள் ஆன்லைன் அலுவலகத்தில் உள்ள தயாரிப்புகளை/படைப்பு களை வெளியுலகுக்கு ஆடியோ வடிவில் இலவசமாக விளம்பரப் படுத்துவதில் சவுண்ட் கிளவுட் (Sound Cloud) பெரும்பங்கு வகிக்கிறது. வானொலி விளம்பரங்களுக்கு இணையாக சவுண்ட் கிளவுட் விளம்பரங்களைக் கருதலாம். நீங்கள் பதிவு செய்த ஆடியோவை வைத்தே உங்கள் பிசினஸுக்கு விளம்பரம் செய்யமுடியும்.
கம்ப்யூட்டருடன் இணைக்க தரமான மைக்கும் ஸ்பீக்கரும் தேவை. பிறகு சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder) போன்று ஏதேனும் ஒரு சாஃப்ட்வேர் மூலம் பதிவு செய்து, பதிவேற்றம் செய்யலாம். சவுண்டைப் பதிவு செய்ய இலவசமாகவே சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன. மொபைலில் பதிவு செய்த ஆடியோ ஃபைலைக்கூட பயன்படுத்தலாம்.
இப்படி நீங்களாகவே பதிவு செய்த ஆடியோவை சவுண்ட் கிளவுடில் பதிவேற்றம் செய்து, உங்கள் தயாரிப்புகள் கவனம் பெற்றால் விற்பனை மேம்படும். சவுண்ட் கிளவுட் வெப்சைட்டிலேயேகூட நேரடியாகப் பேசிப் பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
வானொலி விளம்பரங்கள் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் நொடிப் பொழுதில் நம் மனதில் பதியும்படி விளம்பரம் செய்வார்கள். அதுபோல உங்கள் தயாரிப்புகள் குறித்த விவரங்களைச் சுருக்கமாக எழுதி, பதிவு செய்யலாம்.
பாடும் திறமையுள்ளவர்கள் சவுண்ட் கிளவுட் மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தி, திறமையை வளர்த்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் மற்ற ஊடகங்களில் தங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். திறமையையே வருமான மாக்குகிறார்கள்.
சவுண்ட் கிளவுட் உறுப்பினராவது எப்படி?
https://soundcloud.com வெப்சைடில் Create account என்பதை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, உறுப்பினராகலாம். உங்களுக்கான யூசர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சவுண்ட் கிளவுட் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வது எப்படி?
https://soundcloud.com வெப்சைட்டில் சைன் இன் செய்துகொண்டு, upload பட்டனை க்ளிக் செய்து, Choose a File to Upload மூலம் நாம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஆடியோ ஃபைலைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு Play பட்டனை க்ளிக் செய்து ஆடியோவை முழுமையாகக் கேட்கலாம்.
சவுண்ட் கிளவுட் வெப்சைட்டில் ஆடியோ பதிவு
சவுண்ட் கிளவுட் வெப்சைட்டில் upload க்ளிக் செய்து, Upload to Sound Cloud என்பதில் Start New Recording என்பதை க்ளிக் செய்யவேண்டும்.
இப்போது Upload and Share any Sound என்பதில் REC என்ற பட்டனை க்ளிக் செய்து, நம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட மைக்கில் பேசினால் பதிவாக ஆரம்பிக்கும்.
ஆடியோ ஃபைல்களை ஷேர் செய்யும் முறை
சவுண்ட் கிளவுடில் பதிவேற்றம் செய்த ஆடியோவை ஃபேஸ்புக், டிவிட்டர், இமெயில் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்தால்தான் அவை மக்களைச் சென்றடையும். நாம் பதிவேற்றம் செய்த ஆடியோ டிராக்கின் கீழேயே Share என்பதை க்ளிக் செய்து, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago