திரைக்குப் பின்னால்: பெண்களால் பல வேலைகளைச் செய்ய முடியும்!

By கா.இசக்கி முத்து

தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘Le Magic Lantern’ திரையரங்கம். பத்திரிகையாளர் காட்சி, தணிக்கைக் காட்சி, டப்பிங் பணிகள் உள்ளிட்ட திரையுலகின் பல பணிகள் இங்கு நடைபெற்றுவருகின்றன. இந்தத் திரையரங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று, சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார் லிசி.

‘லெ மேஜிக் லேன்டன்' திரையரங்கின் அடுத்த திட்டம் என்ன?

டப்பிங் திரையரங்கம், 2 ப்ரிவ்யூ திரையரங்குகள் உள்ளன. பெரிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் டப்பிங் பணிகளுக்கு வரும்போது, நேரம் கொடுக்க முடியவில்லை. அதனால் மற்றொரு டப்பிங் திரையரங்கைத் தயார் செய்கிறோம். இதில் அதிநவீன தொழில்நுட்பங்களை வைத்திருக்கிறோம். இதுபோன்ற ஒரு திரையரங்கம் சென்னையில் இல்லை என்றே சொல்லலாம்.

டிவிடியை 5.1 தொழில்நுட்பத்தில் திரையிட்டுப் பார்க்கும் வசதி சென்னையில் இல்லை. அதில் ஒரு தொழில் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கான வசதியைத் தற்போது செய்துவருகிறோம். இதில் குறைந்த செலவில் திரையிட்டுக் காட்டலாம். குறும்பட இயக்குநர்களுக்காக ஒரு சங்கம் உருவாக்கியிருக்கிறோம். இன்றைய குறும்பட இயக்குநர்கள்தான் நாளை திரையுலக இயக்குநர்கள். ஒவ்வொன்றாகத் திட்டமிட்டு, தற்போதுள்ள இடத்துக்குள்ளேயே தேவையான விஷயங்களைச் செய்துவருகிறோம்.

புதிய பொறுப்புகள் கடினமாக இல்லையா?

முதலில் கஷ்டப்பட்டது உண்மைதான். இப்போது அனுபவம் வந்துவிட்டது. முழுமையாக நிர்வாகத்தைக் கவனிப்பதால், பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்துவிடமுடிகிறது.

திரையுலக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?

லிசி என்பதால் மட்டும் திரையுலகினர் இங்கு படப்பணிகளைச் செய்ய வரவில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் இங்கு இருப்பதால் மட்டுமே வருகிறார்கள். பெரிய நடிகர்கள் இங்கு பணிகளுக்காக வரும்போது அவர்களுக்கான வசதிகளைச் செய்து தர வேண்டும். யார் நிர்வாகம் செய்தாலும் திரையுலகினர் எதிர்பார்க்கும் வசதிகள் இருக்கின்றனவா என்பது மட்டுமே முக்கியம்.

குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவதில் சிக்கல் இருக்கிறதா?

வாழ்க்கையில் நேரம் ரொம்ப முக்கியம். 2 குழந்தைகளுமே பெரியவர்களாகி விட்டார்கள். முன்பு அம்மாவாக முழுமையாக இருந்தேன். தற்போது அவர்களுடன் நான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதனால் எளிதாகச் சமாளிக்க முடிகிறது. ஆண்களால் வேலை, வீடு, குழந்தைகள் என்று அனைத்தையும் பார்க்க முடியாது. ஆனால், பெண்கள் அப்படியில்லை. ஆண்களை விடத் திறன் படைத்தவர்கள். பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதைப் பலரும் நிரூபித்துள்ளார்கள்.

1994-ம் ஆண்டுக்குப் பிறகு ஏன் நடிக்கவில்லை?

ஒரு வருட இடைவெளியில் இரு குழந்தைகள் பிறந்துவிட்டனர். அலுவலகப் பணி என்றால் எளிதாக இருந்திருக்கும். நடிகையாக அது முடியாது. எப்போது படப்பிடிப்பு முடியும் என்று கணிக்கவே முடியாது. வெளியூருக்குப் படப்பிடிப்புக்குச் செல்லும் போது, வேறொருவரிடம் குழந்தைகளை விட்டுச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. நானே குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நினைத்தேன். குழந்தை வளர்ப்பைச் சரியாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். என் வயதுக்கு ஏற்ற அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக மறுபடியும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் நடித்தால், அந்தக் கதை மக்களுக்குப் புதிதாக இருக்க வேண்டும்.

தமிழில் ஏன் அதிகம் நடிக்கவில்லை?

தெலுங்கில் ஒரே வருடத்தில் 7 படங்கள் செய்தேன். அதில் 5 படங்கள் மாபெரும் வெற்றி. அந்தச் சமயத்தில் திருமணமும் செய்துகொண்டேன். தமிழில் நடிக்கும் போதுதான், காதல் மலர்ந்தது. காதல் செய்திகளால் தயாரிப்பாளர்களும் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

விவாகரத்து ஏன்?

ஒரு விஷயம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நிறைய இருக்கிறது. பிரச்சினைகள் பெரிதாகும்போது, பாதிப்பிலிருந்து வெளியே வர, பிரிவதுதான் சிறந்தது. வாழ்க்கை முழுவதும் இதே பிரச்சினைகளோடுதான் பயணிக்க வேண்டுமா என்று யோசித்துப் பிரிந்தோம். ஒரே வீட்டில் இருந்துகொண்டு, குழந்தைகள் முன்னால் சண்டையிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அது அவர்களுக்குப் பெரிய கஷ்டம்.

குழந்தைகள் என்ன சொன்னார்கள்?

குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் நீதிமன்றத்துக்குச் சென்று, என்னோடுதான் இருக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குப் போகவில்லை. அவர்கள் அப்பா, அம்மா இருவர் கூடவும் இருக்கலாம். நானும் அவரும் வெவ்வேறு ஊர்களில் இல்லை. என்னுடைய வீட்டிலிருந்து அவருடைய வீட்டுக்கு 10 நிமிடங்களில் சென்றுவிடலாம். நாங்கள் குழந்தைகளைப் பிரிக்கவில்லை. ஒரே வீட்டிலிருந்து கொண்டு சண்டையிட்டுக்கொள்வதை விட, இப்படியிருப்பது நிம்மதி. உங்களுக்கு இதுதான் சரியென்றால் செய்யுங்கள் என்று குழந்தைகளும் சொன்னார்கள். அவர்களுக்கும் அதற்கான முதிர்ச்சி வந்துவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்