என்ன முடிவெடுத்தீர்கள்? ஆடி காரா? அம்பாசிடரா? ஆடி கார்தானே! வெரிகுட், உங்களுக்கு நிச்சயமாக அம்பாசிடர் காராவது கிடைக்கும். நான் விலையின் அடிப்படையில் மட்டுமே சொல்கிறேன். மற்றபடி இது உயர்வு இது தாழ்வு என்றெல்லாம் சொல்ல வரவில்லை. நம்முடைய ஆசை உச்சத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச இலக்கையாவது எட்ட முடியும்.
லாபத்தைப் பணமாக்குங்கள்
பெரிதினும் பெரிது கேள் என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். அதற்கான முயற்சியில் நமக்குச் சில பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், நம்முடைய இலக்கில் பெரும்பகுதியை நம்மால் அடைந்துவிட முடியும். ஆசைப்படுவது துன்பத்துக்குக் காரணமாக அமைந்துவிடும் என்பதுதானே பொதுவான கருத்தாக இருக்கிறது? ஆனால், நாம் ஆசைப்படும்போதுதான் நம்மால் இலக்குகளை அமைக்க முடியும். நல்ல ஆடைகள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்தான் நம்மால் ஓடி ஓடி உழைக்க முடியும். இருப்பதற்கு ஒரு கூரை வேண்டும் என்று ஆசைப்பட்டால்தான் நம்மால் சம்பாதித்து வீடு வாங்கும் திட்டத்தை வகுக்க முடியும். அதற்கான பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும்.
பிள்ளைகளுக்கான உயர் கல்வி, பெரியவர்களுக்கான மருத்துவ வசதி, ஆண்டுக்கொரு சுற்றுலா, ஆடம்பரப் பொருட்களை அத்தியாவசியமாக்கும் வருமானம் என்று எல்லா வகையிலும் நாம் ஆசைப்பட்டால்தான் நம்மால் அதற்கு ஏற்பத் திட்டமிட முடியும். நம்முடைய வருமானம் மட்டுமே போதாது, வேவ்வேறு வகைகளிலும் உழைக்க வேண்டும். நம் லாபம் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
இப்படி எல்லா வகையிலும் நம் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்று எண்ணினால்தான் நம்மால் திட்டமிட முடியும். திட்டமிட்டால்தான் முதலீடு செய்ய முடியும். முதலீடு வளரும் நேரத்தில் லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியே வர முடியும். நம் ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதனால், ஆசைப்படுவது என்பது ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அடிப்படை யான குணமாக இருக்க வேண்டும்.
ஆசைப்படுவதைப் போலவே அதைச் செயல்படுத்துவதும் முக்கியம். நாம் ஆசைப்பட்டதை வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? கையில் உள்ள பங்குகளை லாபம் வரும்போது விற்று கையில் ரூபாய் நோட்டைப் பார்க்க வேண்டும். லாபத்தை அனுபவிக்க வேண்டும். அது முதலீட்டாளரின் வாழ்க்கையில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம்.
பசித்தால் என்ன செய்வோம்?
ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறீர்கள். நீங்கள் நிர்ணயம் செய்திருக்கும் கால கட்டத்துக்குப் பிறகு அந்தத் தொகை இருபது சதவீதம் லாபம் சம்பாதித்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நல்ல லாபம் கிடைத்திருக்கும் சந்தோஷம் உண்மையானதுதானா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.
இதில் என்ன சந்தேகம், என் கணக்கில் லாபம் வரவு வைக்கப்பட்டிருக்கிறதே என்கிறீர்களா? உங்களுக்குக் கடுமையான பசி எடுக்கும் நேரத்தில் ஒரு காகிதத்தில் பிரியாணி என்று எழுதியோ அல்லது பிரியாணி புகைப்படத்தை ஒட்டியோ கொடுத்தால் உங்கள் பசி தீருமா? அதேதான் முதலீட்டுக் கதையிலும். இரண்டாயிரம் ரூபாய் லாபம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் போதாது. அதைக் கையில் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் அந்த லாபத்தை நாம் அனுபவிப்பதாக அர்த்தம்கொள்ள முடியும்.
மொத்த முதலீட்டையும் வெளியில் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், லாபத்தை வெளியில் எடுத்துதான் ஆக வேண்டும். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போய் குடும்பத்தோடு ஓட்டலில் சாப்பிடலாம், சுற்றுலா போகலாம். ஒரே விஷயம், லாபத்தை சந்தோஷமாகச் செலவு செய்ய வேண்டும்.
ஏன் அப்படி? அந்த லாபத் தொகையும் முதலீட்டோடு சேர்ந்து இருந்தால் இன்னும் வளர வாய்ப்பிருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினால் முதல் மாத சம்பளத்தை அந்தப் பிள்ளை நம் கையில் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு நிகரான மகிழ்ச்சிதான் நம் முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்தைச் செலவு செய்வதும். அதனால்தான் லாபத்தை வெளியில் எடுக்க வேண்டும் என்கிறேன்.
ஒருவேளை இந்த முதலீடு நாளையே சரிவைச் சந்திக்கலாம். அப்போது பனிரெண்டாயிரமாக இருக்கும் முதலீடு சட்டென்று சரிந்து எட்டாயிரம் ஆகிவிடலாம். அப்போது நம்முடைய இழப்பு மிகப் பெரியதாக இருக்கும். அதே சமயம் நாம் லாபத்தை வெளியில் எடுத்திருந்தால் சந்தை முதலீடு எட்டாயிரமாகச் சரிந்தால் நம் இழப்பு இரண்டாயிரம்தான். இன்னும் சொல்லப் போனால், பத்தாயிரம் போட்ட முதலீட்டில் இருந்து இரண்டாயிரம் லாபத்தை எடுத்துவிட்டால் சந்தை சரிந்து முதலீடு குறைந்தால் இந்த லாபம் நமக்குக் கைகொடுக்கும்.
அதனால் முதலீடு செய்யுங்கள், குறிப்பிட்ட காலகட்டம் வரையில் காத்திருந்து முதலீடு பெருகும்போது லாபத்தை எடுத்து அதைச் சந்தோஷமாக அனுபவியுங்கள். செலவு என்றால் கேளிக்கையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. பிற வழிகளிலும் செலவழிக்கலாம். வேறொரு முறையில் சேமிப்பாகவும் அதைப் பயன்படுத்தலாம். லாபத்தை எடுத்துவிட வேண்டும் என்பதுதான் முக்கியம்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஆசைப்படுவது தவறில்லை. பேராசைப்படக் கூடாது. அது தவறான, மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். முதலுக்கே மோசம் ஏற்படும். அதைப் பற்றியும் பேசலாம், காத்திருங்கள்!
(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago