ஆன்லைனில் உங்கள் பெயரில் டிவி சானல் ஆரம்பிக்க முடியும். ஏராளமான வெப் டிவிகள் இயங்கிவருகின்றன. தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் ஆன்லைனிலும் இயங்கிவருகின்றன.
யூடியூபில் உங்கள் பெயரிலேயே இலவசமாக டிவி சேனலை உருவாக்கிக்கொண்டு, அதில் உங்கள் சொந்த வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம். பிறர் அனுமதி பெறாத, அவர்களுக்கே சொந்தமான வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
பின்னர் .tv என்ற இணைப்புப் பெயரில் (உதாரணம்: www.ramya.tv) வெப்சைட் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, உங்கள் யூடியூப் சேனல் வீடியோக்களை விருப்பம்போல வெளியிட்டு, தொலைக்காட்சி சேனல்கள் போன்று உங்கள் டிவி சேனலையும் நீங்களே நிர்வகிக்கலாம்.
சேனல் தொடங்குவது எப்படி?
www.youtube.com வெப்சைட் மூலம் யூடியூபில் அக்கவுன்ட்டை உருவாக்கிய பிறகுதான், உங்களுக்கான யூடியூப் சேனலை உருவாக்கிக்கொள்ள முடியும்.
யூடியூப் சேனலில் youtube account settings-ஐ க்ளிக் செய்தால் Create a New Channel என்று வரும். அதை க்ளிக் செய்து உங்கள் சேனலுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரை (உதாரணம்: ramya) வைத்து, விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்தால் உங்களின் யூடியூப் சேனல் உருவாகிவிடும்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஆரம்பத்தில் வெப் முகவரியில் உங்கள் பெயருக்கான சேனல் பெயர் வராது. https://www.youtube.com/channel/UCwUhhHRNl1pVh என்பதைப்போன்ற பொதுவான பெயரிலேயே சேனல் வரும். உங்கள் பெயரில் சேனல் உருவாக யூடியூப் அக்கவுன்ட் தொடங்கி 30 நாட்கள் ஆகியிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 100 பார்வையாளர்களைப் பெற்றிருக்கவேண்டும். யூடியூபுக்கான சேனல் ஐகானைப் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு உங்கள் யூடியூப் சேனல் உட்படும்போது, உங்கள் பெயரிலேயே சேனல் (உதாரணம்: www.youtube.com/user/ramya அல்லது www.youtube.com/ramya) உருவாகும். பிறகு, இந்த வெப்சைட்டில் நீங்கள் தயாரிக்கிற வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, பயன்படுத்தலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் யூடியூப் சேனல் முகவரியைக் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம்.
.tv என்ற இணைப்புப் பெயரில் உள்ள உங்கள் வெப்சைட்டில் யூடியூப் வீடியோக்களை வெளி யிட்டு வெப் சேனலைச் சிறப்பாக நிர்வகிக்கலாம்.
லைசென்ஸ் அவசியம்
யூடியூபில் வீடியோக்களுக்கும் லைசென்ஸ் உண்டு. Standard License, Creative Common License என இரண்டு விதமான லைசென்ஸ் உண்டு.
Standard License
யூடியூபில் நாம் பதிவேற்றம் செய்யும் அனைத்து வீடியோக்களும் யூடியூபின் பொதுவான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே பதிவேற்றமாகும். இது Standard License. அதாவது யூடியூபில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அவரவர் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். பார்வையாளர்களை எந்த விதத்திலும் பாதிக்காதவண்ணம் இருப்பதும், பிறர் அனுமதி பெறாத வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதும் அவசியம். இவை Standard License என்ற பிரிவின் கீழ் வரும்.
Creative Common License
யூடியூபில் நாம் பயன்படுத்திக்கொள் வதற்காகவே ஏராளமான வீடியோக்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு Creative Common வீடியோக்கள் என்று பெயர். இதைச் சுருக்கமாக CC வீடியோக்கள் எனலாம். இதன் மூலம் நாம் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை மற்றவர்கள் பயன்படுத்தவும், மாற்றங்கள் செய்து வெளியிடவும் அனுமதி கொடுக்கலாம். இதற்கு Creative Commons License என்று பெயர்.
தற்போது யூடியூபில் இதுபோன்ற Creative Common வீடியோக்கள் லட்சக்கணக்கில் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்து, யூடியூபில் நம் சேனலிலேயே வெளியிட்டுக்கொள்ளலாம். இவற்றோடு நம் வீடியோக்களையும் கலந்து (Remix) பயன்படுத்த முடியும். இதற்கு வீடியோ எடிட்டர் (Video Editor) உதவுகிறது. இந்தவகை வீடியோக்களுக்கு Creative Commons License என்ற லைசென்ஸைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த லைசென்ஸ் பொருத்திக்கொண்ட வீடியோக்கள் அருகில் Creative Commons என்பதற்கான ஐகான் வெளிப்படும். இந்த வீடியோவை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி அவர்கள் வீடியோவோடு ரீமிக்ஸ் செய்துகொள்ளலாம் என்று பொருள்.
யூடியூபில் வீடியோவைப் பதிவேற்றம் செய்த பிறகு, அதன்கீழ் License and rights ownership என்ற பிரிவின்கீழ் லைசென்ஸின் பெயர்கள் வெளிவரும். அதில் இருந்து தேவையான லைசென்ஸின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் வீடியோ எடுத்து தான் உங்கள் தயாரிப்பு களை யூடியூபில் அப்லோட் செய்ய முடியும் என் பதில்லை. உங்கள் சொந்தப் புகைப்படங்கள், ஆடியோ ஃபைல்கள் இவற்றைக்கூட யூடியூபில் வீடியோவாக்க முடியும்.
புகைப்படங்களுக்கு
யூடியூப் வெப்சைட்டில் Upload பட்டனை க்ளிக் செய்தால், Create Videos என்ற தலைப்பின்கீழ் Photo Slideshow-வை க்ளிக் செய்து, தேவையான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து வீடியோவாக்கிப் பதிவேற்றலாம். தேவைப்பட்டால் யூடியூபிலேயே இலவசமாகக் கொடுத்துள்ள ஆடியோ ஃபைல்களையும் இணைத்துக்கொள்ளலாம்.
பாடல்களுக்கு
நீங்களே பாடல்களைப் பாடியோ அல்லது இசைக் கருவிகள் மூலம் வாசித்தோ பதிவுசெய்து வைத்துள்ளவற்றைப் புகைப்படங்களோடு இணைத்து, வீடியோ ஃபைலாகப் பதிவேற்றலாம். இதற்கு, Windows Live Movie Maker (இது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாஃப்ட்வேர்) போன்று ஏதேனும் ஒரு சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சேனல்கள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago