இதுதான் இப்போ பேச்சு: வெட்கம் களையும் மணப்பெண்கள்!

By யாழினி

மணமகளே மணமகளே வா வா என்ற பாடல் ஒலிக்க, வெட்கித் தலைகுனிந்து கையில் விளக்கேந்தியபடி மணப்பெண்கள் மண்டபத்துக்குள் நுழையும் காட்சிகள் இன்று குறைவு. இன்றைய மணப்பெண்கள் தங்களுடைய வாழ்க்கையின் சிறந்த தருணத்தை முழுவதுமாக உணர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காகப் பல புதுமையான துணிச்சலான முயற்சிகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் ‘பிரைட்ஸ் என்ட்ரி டான்ஸ்’ (Bride's Entry Dance) என்ற மணப்பெண் நடனம். கடந்த சில ஆண்டுகளாக, இந்த வகை நடனம் இந்தியத் திருமணங்களில் பிரபலமாகிவருகிறது.

நாங்களே கதாநாயகிகள்

தங்களுடைய திருமணத்தன்று நண்பர்கள், உறவினர்கள் எப்படி மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கிறார்களோ, அதே மாதிரி உற்சாகத்துடன் தாங்களும் இருக்க வேண்டும் என்று மணமக்கள் விரும்புகிறார்கள்.

“இன்று பெரும்பாலானவர்கள் பிரம்மாண்டமான, வித்தியாசமான, அட்டகாசமான முறையில் தங்களுடைய திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். திருமணத்தன்று தான் ஒரு கதாநாயகியாக உணர வேண்டும் என்று பல பெண்கள் விரும்புகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த மணப்பெண்ணின் நடனக் கொண்டாட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், திருமணங்களில் இதுபோன்ற அம்சங்கள் அதிகரிப்பதற்குச் சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒரு காரணம். இன்று எல்லோரும் தங்களுடைய திருமணம் பிரமாதமாக நடைபெற்றது என்பதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அதனால் தங்கள் திருமணத்தை எப்படியெல்லாம் தனித்துவம் வாய்ந்ததாக மாற்றலாம் என்று யோசித்து இந்த மாதிரி விஷயங்களை மணமக்கள் இணைக்கிறார்கள். இந்தப் புதிய அம்சங்களைப் பெற்றோர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஈவென்ட் மேனேஜர் ஷரண்யா சுப்ரமணியம்.

கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை

திருமண மண்டபத்தில் மணப்பெண்கள் வெட்கத்துடன் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்னும் பழைய விதியை ‘என்ட்ரி டான்ஸ்’ போன்ற அம்சங்கள் உடைத்திருக்கின்றன.

“வழக்கமாக மணப்பெண்களுக்கே உரிய தயக்கத்தை உடைத்து, தங்களுடைய திருமணத்தை முழுமையாகக் கொண்டாடுவதற்கு இப்போது பெண்கள் முன்வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ‘என்ட்ரி டான்ஸ்’ போன்ற அம்சங்களை நிச்சயம் வரவேற்கலாம். ஆனால், இந்தத் தேர்வு முழுமையாகத் தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. சிலர் எளிமையான திருமணத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர், திருமணச் சடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தால் போதும் என்று நினைப்பார்கள்.

அதனால், இந்தத் திருமணம் தொடர்பாக பிரபலமாகும் நடைமுறைகள் எல்லாமே தனிநபர் பார்வை சார்ந்த விஷயம். ஆனால், எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நாமும் செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தத்தில் இந்த மாதிரி அம்சங்களைத் திருமணத்தில் இணைக்கும்போது அது அவ்வளவு இனிமையான அனுபவமாக இருக்காது. அதனால், உண்மையிலேயே உங்களுடைய மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டும் இந்த மாதிரி அம்சங்களைப் பின்பற்றுவது நல்லது” என்று விளக்குகிறார் ஷரண்யா.

இந்த மணப்பெண்ணின் ‘என்ட்ரி டான்ஸ்’ சிறப்பாக அமையவேண்டும் என்றால் அதற்குப் போதிய நடனப் பயிற்சி, பாடல்களின் தேர்வு, நண்பர்கள், உறவினர்களின் முழு ஒத்துழைப்பு போன்றவையும் முக்கியம் என்பதைக் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.

- ஷரண்யா சுப்ரமணியம்

வைரலாகும் என்ட்ரி டான்ஸ்

மணப்பெண்களின் திருமண நடனங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த மணப்பெண் அமிஷா பரத்வாஜ்ஜின் ‘பிரைட் கெட்டிங் ரெடி’ (Bride Getting Ready) நடனம் அதில் முக்கியமானது. ஆஸ்திரேலிய பாடகி சியாவின் ‘சீப் திரில்ஸ்’ பாடலுக்கு அமிஷா தன்னுடைய திருமண உடையைக் கையில் வைத்துக்கொண்டு, தன் தோழிகளுடன் சேர்ந்து நடனமாடியிருப்பது பல தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. திருமணத்துக்குத் தயாராகும் ஒரு மணப்பெண்ணின் துணிச்சலான நடனமாக இது இருந்ததால் சமூக ஊடகங்களில் பல பெண்களிடம் இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. யூடியூப்பில் இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவைப் பார்த்திருக்கின்றனர்.

வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்