மின்னணு கருவிகளில் தமிழில் தட்டச்சு செய்வது பற்றி பலர் கேட்டிருக்கிறார்கள். வலைப்பூ, வெப்சைட் மட்டுமில்லாமல் இனி நான் எழுதவிருக்கும் யூ-டியூப் மூலம் பணம் சம்பாதித்தல், ஃபேஸ்புக் விளம்பரங்கள், ஸ்கைப் மூலம் வாடிக்கையாளர் சேவை இப்படி அத்தனைக்கும் தமிழில் தட்டச்சு செய்வது அத்தியாவசியம் என்பதால் அது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்ப்போம்.
1. கம்ப்யூட்டரிலும் ஸ்மார்ட்போனிலும் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
கூகுள் இன்புட் டூல்ஸ் என்ற வசதியை மிக எளிமையாகப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த தமிழ் தட்டச்சு தெரிய வேண்டும் என்பதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய நினைப்பதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தாலே போதும், அவை தமிழில் வந்துவிடும். ammaa, appaa என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அவை அம்மா, அப்பா என்று தமிழ் வார்த்தைகளாக வந்துவிடும். இது ஃபொனெடிக் (Phonetic) முறையில் தட்டச்சு செய்தல். ஒவ்வொரு வார்த்தையையும் தட்டச்சு செய்த பிறகு கீபோர்டில் ஸ்பேஸ் பாரை அழுத்தினால் ஆங்கிலம் தமிழாக மாறிவிடும்.
>https://www.google.com/inputtools/ என்ற வெப்சைட்டுக்குள் சென்றால் On Chrome, On Windows, On Google Services என
மூன்று விவரங்கள் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் இதிலுள்ள Try it
என்ற பட்டனை க்ளிக் செய்தால் Try Google Input Tools Online என்ற தலைப்பில் திரை வரும்.
திரையின் கீழ் On the Web, For Android Devices, For Your PC என மூன்று விவரங்கள் இருக்கும்.
On the Chrome கீழ் Install the Chrome Extension என்பதைத் தேர்ந்தெடுத்தால் குரோம் பிரவுசர் சாஃப்ட்வேரில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் புரோகிராம் டூல் வரும். இதன் மூலம் ஆன்லைன் கூகுள் சர்ச், வெப்சைட்கள், வலைப்பூ, யூ-டியூப், ஃபேஸ்புக் என அத்தனை ஆன்லைன் சர்வீஸ்களிலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.
For Android Devices கீழ் Get it on Google Play என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஆண்ட்ராய்டு போனில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்ய உதவும் வழிமுறைகள் தெரியும்.
For your PC கீழ் Download for Windows என்பதைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர், லேப்டாப் பில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
2. நான் சிறுபத்திரிகை நடத்திவருகிறேன். அதை அப்படியே மின்னூலாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?
மின்னூல் நடத்துவதற்கென்று பிரத்யேகமான சாஃப்ட்வேர் எதுவும் கிடையாது. வழக்கமாக வெப்சைட்டுகளை வடிவமைப்பதுபோலவே மின்னூலையும் டிஸைன் செய்து, பத்திரிகைகளில் வரும் தலைப்புகளுக்கு ஏற்ப மெனுக்களை வடிவமைத்து, அவற்றின்கீழ் பொருத்தமான கட்டுரைகளை வெளியிடலாம். வேர்ட்பிரஸ் (Wordpress.com), பிளாகர் (Blogger.com) போன்ற வெப்சைட்கள் மூலம் மின்னூல்களை எளிமையாக வடிவமைக்கலாம்.
ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி, புத்தகம் படிப்பதைப்போலவே வடிவமைக்கும் நுட்பத்துக்கு ‘ஃபிளிப் புக்’ (Flip Book) என்று பெயர். அதையும் மின்னூலிலேயே இணைத்துக்கொள்ள முடியும். ‘ஃபிளிப் புக்’ தயாரிப்பதற்கு ஏராளமான ‘பிளகின்ஸ்’ (Plugins) உள்ளன. குறைந்தபட்ச வசதிகளுடன் அவை இலவசமாகவும் கிடைக்கின்றன. கட்டணம் செலுத்தி முழுமையான வசதிகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.
(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago