ஃப்ளையிங் ஃப்ளவர் என்று சொன்னால் தடகள விளையாட்டுகளில் தெரியாதவர் இருக்க முடியாது. தலையில் மிகப் பெரிய டெய்சி பூவைச் சூடிக்கொண்டு அசுர வேகத்தில் ஓடுவதால் அலிசியாவுக்கு இந்தப் பெயர்! அமெரிக்காவைச் சேர்ந்த இவர், பல்வேறு தடகளப் பிரிவுகளில் தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளைச் செய்திருக்கிறார்.
7 மாத கர்ப்பிணியான அலிசியா, யாரும் இதுவரை செய்திராத ஒரு துணிச்சலான செயலைக் கடந்த ஜூன் மாதம் செய்தார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கலந்துகொண்டார்.
அவரின் துணிச்சலைப் பாராட்டி, ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள். தலையில் பூவையும் வயிற்றில் குழந்தையையும் சுமந்துகொண்டு ஓட ஆரம்பித்தார் அலிசியா. அவரால் பதக்கம் எதுவும் பெற முடியவில்லை.
ஆனால் முழுமையாக ஓடி முடித்திருந்தார். அந்தப் போட்டியில் பதக்கம் பெற்றவர்களைவிட அலிசியாவுக்குப் புகழும் பாராட்டுகளும் குவிந்தன.
“வயிற்றில் குழந்தையுடன் ஓடியதை எல்லோரும் சாதனையாக நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. கர்ப்பமாக இருந்தபோதும் வழக்கமாக நான் செய்யும் உடற்பயிற்சிகளை செய்தேன். எல்லா வேலைகளையும் செய்தேன்.
அதேபோலத்தான் தடகளப் போட்டிகளிலும் கலந்துகொண்டேன். இதன் மூலம் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். எல்லோரும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
கர்ப்பமாக இருக்கும்போதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சியால் நானும் ஆரோக்கியமாக இருந்தேன், என் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது. தைரியமும் தன்னம்பிக்கையும் கொஞ்சம் கவனமும் இருந்தால் கர்ப்ப காலத்திலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறேன்” என்கிறார் அலிசியா.
2008-ம் ஆண்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, பாதங்களில் கடுமையான வலி. அலிசியாவால் நிற்கக்கூட முடியவில்லை.
ஓராண்டு வரை அவரால் எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, போட்டிகளையும் பயிற்சிகளையும் கவனித்தார்.
“விரைவில் எனக்குச் சிறகுகள் முளைக்கும். அப்போது நீண்ட தூரத்துக்குப் பறந்து செல்வேன்’ என்று தனக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டார். தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால் மீண்டு வந்தார் அலிசியா.
அதற்குப் பிறகு 5 முறை தேசிய சாம்பியன் பட்டங்களை வென்றார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றார். இன்று அமெரிக்காவின் மிக வேகமாக ஓடக்கூடிய பெண் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்.
28 வயது அலிசியாவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரோக்கியமான ‘லிட்டில் ஃப்ளையிங் ஃப்ளவர்’ பிறந்திருக்கிறது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago