நான் சௌந்தர்யா. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் உள்ள நஞ்சை இடையார் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண். எங்கள் பஞ்சாயத்தில் கோரை அதிகமாக விளையும். இந்தக் கோரையை நாம் ஏன் தொழில் செய்யக் கூடாது என்று நினைத்தேன். அப்போது எங்கள் பஞ்சாயத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுவில் நான் இருந்தேன்.
மாதாந்திரக் குழு கூட்டத்திற்குச் சென்றபோது எங்கள் குழுவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பற்றித் தெரியவந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் இணை மானியக் கடன் பெற்று, கோரைப் பாய் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன். தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், கிராமத்தில் உள்ள பெண்களின் உதவியுடன் இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவருகிறேன். இ
ப்போது நான் தயாரிக்கும் கோரைப் பாய்களை சென்ட்ரிங் வேலை செய்யும் பலருக்கு என்னால் விநியோகிக்க முடிந்தது. இந்தத் தொழிலின் மூலம் என் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது.
இந்த தொழிலை தொடங்குவதற்காக Rs.4,89,000/-, 30% மானியத்துடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கடன் வழங்கப்பட்டது. மேலும் இதனால் என்னுடைய வருமானம் மாதம் Rs.20,000 ஈட்டமுடிகிறது. இதனால் என் குடும்பத்தின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடிகிறது. என்னுடைய தேவைக்காக நான் மற்றவர்களைச் சார்ந்து இருக்கத் தேவையில்லை. என்னைப் போன்ற பல பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற திட்டங்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கிராமப்புறப் பெண்களின் வெற்றி! - விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சியில் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாகக் கால்நடைகளை அதிகமாக வளர்த்துவருகின்றனர். ஆனாலும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலுக்குப் போதுமான விலை கிடைக்காமல் இருந்தது.
மேலும், பாலில் மதிப்புக் கூட்டுப்பொருள்கள் தயாரித்தால் போதுமான வருமானம் கிடைக்கும் என நினைத்தபோது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக ,சமுதாயத் திறன் பள்ளி செயல்படுகிறது என்பதை அறிந்தோம். மகளிர் குழுக்களில் உள்ள தகுதியான 20 பேருக்குப் பயிற்சி பெற விண்ணப்பித்தோம்.
முதன்மைப் பயிற்றுநர் தெய்வேந்திரன், ஹோட்டல் மேலாண்மை முடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலில் சமையலராகப் பணிபுரிந்து வருகிறார். அவரைக் கொண்டு பயிற்சி நடத்த ஒப்புதல் பெறப்பட்டது. எங்களது விண்ணப்பத்தை ஏற்று எங்கள் ஊரில் பால் பொருள் தயாரிக்கும் சமுதாயத் திறன் பள்ளி தொடங்க ரூ.64,000 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது. 20 நாள்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ரூ. 1,000 மதிப்பிலான ‘டூல் கிட்ஸ்’ அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
பயிற்சியில் பால்கோவா, பால் அல்வா, பால் கேசரி, குலோப் ஜாமுன், பாதாம் கீர் போன்ற 21 வகையான தயாரிப்புமுறைகள் பற்றிக் கற்றுத்தரப்பட்டது. பால் பொருள் தயாரிப்புப் பயிற்சிக்குப் பின்னர் எங்களது குழு உறுப்பினர்களில் 12 பேர் சொந்தமாகவும் 8 பேர் நிறுவனங்களிலும் இணைந்து இந்தத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களைப் போன்ற கிராமப்புற மகளிருக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு நன்றி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago