சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில் வசிக்கிறார் செண்பகவள்ளி. கடந்த 5 வருடங்களாகப் புடவைகளுக்கு பாலீஷ் போடும் வேலையைச் செய்துவருகிறார். இதில் குறைவான வருமானமே கிடைத்துவந்தது.
இந்நிலையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் இணை மானியத் திட்டத்தில் மானியத்துடன் கூடிய தொழில் கடன் கிடைப்பது (MGP கடன்) தொழில் சார் சமூக வல்லுநர் மூலமாகத் தெரிந்தது. அதன் பின் வட்டார அலுவலகம் சென்று விவரங்களைத் தெரிந்துகொண்டு MGP கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தார். மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டத்தில் இவரது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு மாநில அலுவலர்களால் நேர்காணல் செய்யப்பட்டுத் தேர்வானார்.
“எங்கள் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் இளம்பிள்ளை சிந்தாமணியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புடவை நெய்யும் தொழில் அதிகமாக நடைபெறும். இதனால், எனக்குப் பெரிய பெரிய கம்பெனிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரம் சேலைக்கு மேல் ஆர்டர் கிடைக்கும். அதனால், அயர்னிங் போன்ற வேலைகளை வெளி கம்பெனிகளுக்குத் தருவோம். இந்த நிலையில் இணை மானியத் திட்டத்தின் மூலம் கூடுதலாக மெஷின் வாங்க ரூ.30,34,960 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சீலநாயக்கன்பட்டி கிளையில் கடன் பெற்றேன்.
இதனால் நேரடியாகக் கடைகளிலிருந்து புடவை வாங்கி சேலை பாலிஷ், இஸ்திரி போன்றவற்றைச் செய்ய இயலும். இந்தத் தொழிலை விரிவுபடுத்தியதன்மூலம் 15 பேருக்கு என்னால் வேலை கொடுக்க முடிகிறது இதனால், மாதம் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை என்னால் சம்பாதிக்க முடியும், என் குடும்பத்தின் பொருளாதார நிலையும் உயர்ந்துள்ளது” என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் செண்பகவள்ளி.
» “இயக்கத்துக்காக இயக்கமாகவே வாழும் மாமனிதர் நல்லகண்ணு” - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
» மேட்டூர் அருகே உ.பி சுற்றுலா பயணிகள் - போலீஸ் மோதல் சம்பவம்: 3 காவலர்கள் சஸ்பென்ட்
வழிகாட்டிய திட்டம்!: சோமூர் பஞ்சாயத்தில் வசிக்கும் கல்யாணி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரண்டு மகள்களின் தாய். அவரின் கணவர் 10 ஆண்டுகளாகக் கொசு வலை பின்னும் தொழிலை நடத்திவருகிறார். கல்யாணியும் ‘மல்லிகை பெண்கள் சுயஉதவிக் குழு’வின் உறுப்பினராக இருக்கிறார். இவர் குழுவின் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று, தையல் தொழில் மூலம் மாதம் ரூ. 4,000 வரை சம்பாதிக்கிறார்.
ஒருநாள் சுயஉதவிக் குழு கூட்டத்தின் போது, ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட ஊழியர்கள் நடத்திய வழிகாட்டுதல் அமர்வில் கலந்துகொண்டார். அப்போது, ‘நானோ தொழில் நிதி நிவாரணத் திட்டம்’ குறித்து அறிந்து கொண்டார். இதன் மூலம், ரூ. 70,000 நிதியைப் பெற்றார். இந்தத் தொகையை வைத்துத் தங்களது தொழிலை விரிவாக்கித் தற்போது மாதம் ரூ. 15,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.
இந்த முன்னேற்றத்தால் உற்சாகமடைந்த மாவட்டத் திட்ட ஊழியர்கள் அவரது தொழிலைக் கண்டு, இணை மானியத் திட்டத்தையும் (ரூ.5,00,000 - MGP) அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் இரண்டு கூடுதல் நெசவுப் பொறிகளை வாங்குவதற்கான கடனைப் பெற்றார். இந்த விரிவாக்கம் உற்பத்தியை அதிகரித்ததோடு, அவரது சுயஉதவிக் குழுவின் இரண்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியது.
மற்றவர்களிடம் சம்பளம் பெறும் பணியாளராக இருந்த கல்யாணி, இன்று மற்றவர்களுக்குச் சம்பளம் வழங்கும் தொழில்முனைவோராக மாறியுள்ளார். பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்ற கல்யாணி, இந்த வெற்றிக்குக் காரணம் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டமே என்கிறார். “நான் ஒரு காலத்தில் மற்றவர்களிடம் சம்பளம் வாங்கிய பணியாளராக இருந்தேன். ஆனால், இப்போது சுயஉதவிக் குழுப் பெண்களுக்குச் சம்பளம் வழங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் கல்யாணி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago