வண்ணங்கள் ஏழு 11: ஆபத்தில் உதவவும் அங்கீகாரம் அவசியம்

By வா.ரவிக்குமார்

 

ன்பால் ஈர்ப்பாளர்களின் உறவை மதித்து அவர்களுக்கு இடையே நடக்கும் திருமணத்தை உலகம் முழுவதும் 21 நாடுகள் சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. இவற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, உருகுவே, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் உண்டு. தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்தை முதன்முதலாகச் சட்டபூர்வமாக அங்கீகரித்த நாடு என்னும் சிறப்பை 2001-லேயே பெற்ற நாடு நெதர்லாந்து.

தீர்க்கப்படாத சிக்கல்

இதுபோன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறாததால் குடும்ப உறவுகளில் தங்களின் இணையைப் பிரதானப் படுத்துவது, சமூகத்தில் தங்கள் இணை குறித்து வெளிப்படையாகப் பேசுவது, சமூகம் சார்ந்த எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பாக ஈடுபடுவது, சொத்துகளைக் கையாள்வது, ஆயுள்காப்பீடு போன்ற பல காரணிகளில் தங்களின் துணையை முதன்மை வாரிசாக அறிவிப்பதில் பலதரப்பட்ட சிக்கல்களைச் சந்தித்துவருபவர்களில் உபாசனாவும் சோனல் கியானியும் அடங்குவர்.

உலக மக்கள்தொகையில் எதிர்பால் ஈர்ப்பை 10 சதவீதத்தினர் விரும்புவதில்லை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உபாசனாவும் சோனல் கியானியும் இதில் அடங்குவர். உபாசனா, பிரபல நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதி. சோனல் கியானி, மாற்றுப் பாலினத்தவருக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திவருபவர். இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்கின்றனர். சுக துக்கங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றனர். இவர்களுக்கு இடையே இருக்கும் உறவை சோனல் கியானியின் பெற்றோர் மதித்து, ஏற்றுக்கொண்டனர். ஆனால், உபாசனாவின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்பால் ஈர்ப்பு உள்ளவர்களின் திருமணத்துக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர்.

முன்னுதாரண முகம்

சோனல் கியானி, லெஸ்பியன் மற்றும் பைசெக்ஷவல் பெண்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, விழிப்புணர்வு போன்றவற்றிலும் அரிய பணிகளைச் செய்வதன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் பிரபலமாக இருப்பவர்.

எல்ஜிபிடி மக்களுக்காக மும்பையில் செயல்படும் இந்தியாவின் மிக முக்கியமான தன்னார்வ அமைப்புகளான yaariyan (friendship) மற்றும் Umang (joy) ஆகியவற்றில் இவர் துணைநிறுவனராக உள்ளார். வேர்ல்ட் எச்ஆர்டி காங்கிரஸ் அமைப்பின் டைவர்சிட்டி லீடர்ஷிப் விருதை இவர் பெற்றிருக்கிறார். அதோடு 30 வயதுக்கு உட்பட்ட எட்டு எல்ஜிபிடி முன்னுதாரண நபர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் ‘பாம்பே தோஸ்த்’ குழு தேர்ந்தெடுத்த பத்து எல்ஜிபிடி இளம் முன்னுதாரணர்களில் ஒருவராகவும் சோனல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹம்சஃபர் அறக்கட்டளையில் அட்வகசி மேனேஜராகவும் அரங்கம், திரைப்படம் வாயிலாக எல்ஜிபிடி மக்களின் பிரச்சினைகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் தூதராகவும் இருக்கிறார்.

ஊடகத்தில் வெளிப்பட்ட போராளி

2011-ல் ஐபிஎன் 7 தொலைக்காட்சியில் ‘ஜிந்தகி லைவ்’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்று, தன்னுடைய பாலின அடையாளத்தை வெளிப்படுத்தினார். இப்படித் தொலைக்காட்சியில் தங்களது பால் ஈர்ப்பை வெளிப்படுத்திய ஐந்து, ஆறு இந்தியப் பெண்களில் சோனலும் ஒருவர். அதோடு 2013-ல் ஜீ டிவியில் ஒளிபரப்பான ‘கனெக்டட் ஹம் தும்’ தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்றார். வீட்டிலும் சமூகத்திலும் பைசெகஷுவல் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்தத் தொடரைத் தொகுத்து வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோலிடம் பகிர்ந்துகொண்டார். இது, எல்ஜிபிடி சமூகம் குறித்த தெளிவை ஏற்படுத்தியது.

எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையை சோனல் கியானி மூலம் பிபிசி2-யின் ‘அவுட் தேர்’ தொலைக்காட்சித் தொடர் உலகம் முழுவதும் கொண்டுசென்றது. ஆமீர்கான் தொகுத்து வழங்கிய புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான ‘சத்யமேவஜெயதே’வில் பங்குபெற்று மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சினைகள் குறித்து சோனல் பேசிய விதம் நாட்டில் மாற்றுப் பாலினத்தவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியது.

உறவை அங்கீகரிக்குமா சட்டம்?

உரிமைகளைப் பெறுவதற்கும் சலுகைகளைப் பெறுவதற்கும் மட்டும்தான் சட்டபூர்வமான அங்கீகாரத்தை மாற்றுப் பாலினத்தவர் எதிர்பார்க்கிறார்களா? நிச்சயமாக இல்லை. சில நேரம் தன்னுடன் இருப்பவருக்கு ஆபத்து நேரத்தில் உதவுவதற்குக்கூட, சட்டபூர்வ அங்கீகாரம் அவசியம் என்பதை ‘மின்ட்’ இதழுக்கு அளித்த பேட்டியில் உபசானா இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட சோனலை மருத்துவமனையில் சேர்த்தோம். சிறுநீரகக் கற்களை அகற்ற அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். உடனடியாக சோனலுக்கு ஆபரேஷன் செய்யச் சொன்னேன். ஆனால், அதற்கு சோனலின் பெற்றோரின் அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் சொல்லிவிட்டனர். அவர்களிடம் நாங்கள் சேர்ந்துதான் வாழ்கிறோம் என்று விளக்கியும், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சோனலின் பெற்றோர் நீண்ட தொலைவிலிருந்து வந்து எழுத்துபூர்வமான அனுமதி கொடுத்தபின்தான், சோனலுக்கு அறுவைசிகிச்சை செய்தனர். ஒரு உயிரைக் காப்பதற்குக்கூட உறவுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் தேவைப்படுகிறதே!”

randu penkuttikal moviரண்டு பெண்குட்டிகள்

தன்பால் ஈர்ப்பில் விருப்பமுள்ள பெண்களின் வாழ்க்கையை, அவர்களின் பிரச்சினையை, சோகத்தைப் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே திரையில் பேசிய படம் ‘ஃபயர்’ (Fire). தீபா மேத்தா எழுதி இயக்கி 1996-ல் ஆங்கிலத்தில் வெளிவந்த படம் இது. ஆனால் இதற்கும் முன்னதாக, 1978-லேயே மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ரண்டு பெண்குட்டிகள்’.

1974-ல் அதே பெயரில் பதிப்பிக்கப்பட்ட விடி. நந்தகுமாரின் நாவலே 1978-ல் மோகன் இயக்கத்தில் திரைப்படமானது. இந்திய இலக்கியச் சூழலில் பெண்களின் தன்பால் உறவைப் பேசிய முதல் நாவலாகவும் இது கருதப்படுகிறது.

(புரிந்துகொள்ள முயல்வோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்