சத்தம் போடாதே!

By இந்து குணசேகர்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. பெண்கள் கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்ட நிலையில், தாலிபான்கள் வெளியிட்டுள்ள புதிய சட்டம் ஆப்கனின் ஒட்டுமொத்த ஆன்மாவையும் சிதைக்கும் வகையில் உள்ளது.

அந்தப் புதிய சட்டத்தில், பெண்களின் குரல் பொதுவெளியில் ஒலிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே வரும்போது பிறருக்குக் கேட்கும்படி அவர் சத்தமாகப் பேசக் கூடாது’ என்பதே அந்தச் சட்டத்தின் சாராம்சம். பொது இடங்களில் பெண்கள் பாடக் கூடாது, சத்தமாகப் படிக்கக் கூடாது, வீட்டுக்குள் இருந்தாலும் பெண்களின் குரல் சத்தமாகக் கேட்கக் கூடாது என்பதை தாலிபான்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தைப் பின்பற்ற மறுப்பவர்கள், கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் தாலிபான்கள் தரப்பு எச்சரித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE