சென்னை 385: பெண்களின் மெட்ராஸ்

By ப்ரதிமா

சென்னையின் நிர்மானத்தில் பெண் களின் பங்கு தவிர்க்க முடியாதது. சென்னையின் அடையாளமாக விளங்குபவற்றில் பெண்களுக்காகப் பெண்களால் நிறுவப்பட்டவையும் அடங்கும்.

இசை, நடனம், சமையல் கலை போன்றவை தவிர்த்து முறைப்படியான பள்ளிப் படிப்பு 1800களின் மத்தியில்தான் மதராஸ் மாகாணத்தில் அறிமுகமானது. சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்புப் பெண்களும் பயிலும் வகையிலான பொதுப் பள்ளிகள் அந்தக் காலத்தில் கனவாக மட்டுமே இருந்தன. ஐரோப்பிய, பிரிட்டிஷ் மிஷனரிகள் சார்பில் பெண்களுக்கென்று பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பிலும் பெண்கள் பள்ளிகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரிட்டன் கல்வியாளரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான மேரி கார்பென்டரின் பங்கு இதில் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர் இவர். பெண்களின் அடிப்படைக் கல்வியில் பிரிட்டிஷ் அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் கார்பென்டர் வாதிட்டார். பெண்களுக்கான பொதுப்பள்ளிகளை அமைக்கச் செலவாகும் என்பதால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டது. பொதுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE