உரிமைகள் மறுக்கப்பட்டு மனிதர்களில் ஒரு பிரிவினர் நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்படும்போது காதல் காவியங்களையும் புனைவுகளையும் படைத்துக் கொண்டிருப்பவர் கலைஞர் அல்ல; சமகாலத்தைப் பிரதிபலிப்பதுதான் ஒரு கலைஞரின் கடமை என்பது நீனா சிமோனின் நிலைப்பாடு. கலையைப் போராட்டக் கருவியாகப் பயன்படுத்தி மக்கள் மனங்களில் விடுதலை உணர்வை விதைத்தவர் அவர்.
இருபதாம் நூற்றாண்டின் இணை யற்ற கலைஞரான நீனா சிமோன், வடக்கு கரோலினாவில் 1933ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் யூனிஸ் கேத்லீன் வேமன். எட்டுக் குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் ஆறாவது குழந்தை அவர். யாரும் கற்றுத் தராமலேயே மூன்று வயதில் பியானோ இசைத்த யூனிஸைப் பார்த்து குடும்பமே வியந்தது. 12 வயதில் தேவாலயத்தில் தனியாக பியானோ வாசிக்கும் அளவுக்கு யூனிஸ் உயர்ந்தார். அந்த முதல் இசை நிகழ்ச்சிதான் அவரது வாழ்க்கையின் திசையை மாற்றியது. தேவாலயத்தில் யூனிஸ் வாசிப்பதை அவருடைய பெற்றோர் முதல் வரிசையில் அமர்ந்து கேட்டனர். அப்போது வெள்ளையினத்தவருக்காக இருக்கையை விட்டுத்தரும்படி யூனிஸின் பெற்றோரைக் கேட்டனர். அதைப் பார்த்ததும் யூனிஸ் கொதித்து விட்டார். பின் இருக்கையில் அமர வைக்கப்பட்ட தன் பெற்றோர் மீண்டும் முதல் வரிசைக்கு வரும்வரை தான் இசைக்கப்போவதில்லை என்பதில் அந்தச் சிறுமி உறுதியாக நின்றார். இறுதியில் அவரது உறுதியே வென்றது!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago