பாரிஸ் ஒலிம்பிக் 2024: சமத்துவ ஒலிம்பிக்

By ப்ரதிமா

பண்டைய கிரேக்கத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை நவீனப்படுத்த நினைத்த ஃபிரெஞ்சு கல்வியாளர் பியர் தெ கூபர்டின், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை நிறுவினார். விளையாட்டு நவீனமயமானபோதும் பெண்களின் விளையாட்டுத்திறன் குறித்த பலரது பிற்போக்குச் சிந்தனையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. ஏதென்ஸ் நகரில் 1896இல் முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது போட்டியாளர்களில் ஒருவர்கூடப் பெண்ணில்லை.

நவீன ஒலிம்பிக் போட்டியை உருவாக்கிய பியர் தெ கூபர்டின், விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதை விரும்ப வில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பது, ‘ஒழுங் கற்ற, நடைமுறைக்கு உதவாத, சுவாரசிய மற்ற, அசிங்கமான’ செயல் எனக் கருதினார். அவர் உயிரோடு இருந்த வரைக்கும் பெண்களின் ஒலிம்பிக்கின் பங்கேற்பை எதிர்த்துவந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE