கொஞ்சம் பேச்சு; நிறைய பாட்டு!

By யுகன்

மூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதை முன்னிறுத்தி இந்தியாவில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது ‘இன்டர்நேஷனல் யூத் டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன்’ (International Youth Developement Foundation). இந்த அமைப்பின் முதல் பரோபகாரர் (first philanthropist woman entrepreneur for IYDF-INDIA) என்னும் பெருமையைப் பெற்றிருப்பவர் மாலினி கல்யாணம்.

மாலினி கல்யாணம், (The PALM, a Charitable Trust) அறக்கட்டளை நிறுவனர், Artistic Pottery Training Academy, இயற்கை ஆர்வலர், IYDF இணைந்து குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றன, இதில் பல்வேறு துறையில் உள்ள தன்னார்வாலர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

இது குறித்து மாலினி கல்யாணம், “இன்டர்நேஷனல் யூத் டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன், சிங்கப்பூரின் பிராந்தியக் கண்காணிப்பாளர் மிகுல் ரோட்ரிக்ஸ், (Regional Observer - IYDF Singapore) மற்றும் அவரின் உதவியாளர் அமீர் ரஹ்மான் ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன் அங்கன்வாடி குழந்தைகளுக்கு அவர்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் சத்தான உணவுப் பொருள்களை வழங்கினோம்" என்றார்.

இன்டர்நேஷனல் யூத் டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் சார்பாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் இருக்கும் அரசு அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளுக்கு ஓவிய உபகரணங்கள், சத்துமாவு, இயற்கை மணமூட்டிகள் கலந்த சோப் போன்றவற்றை ஆர்ட்டிஸ்டிக் பாட்டரி டிரெயினிங் அகாடமியின் தன்னார்வலர்கள் என்.வரலஷ்மி, ஆர்.ஜீனத், ராஜகுமாரி ஆகியோர் வழங்கினர். தன்னார்வலர் ஸ்டானி பிரசன்னா கிடார் வாத்தியத்தை வாசித்தபடி குழந்தைப் பாடல்களைப் பாடினார். அவரோடு குழந்தைகளும் இணைந்து பாடினர். கொஞ்சம் பேச்சு, நிறையப் பாட்டு என நிகழ்வைக் கலகலப்புடன் மாலினி கல்யாணம் ஒருங்கிணைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE