பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தேவையில்லையா?

By ப்ரதிமா

பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கக் கோரிய பொதுநல மனுவை அண்மையில் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது. மாநில அரசுகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் இது குறித்து விவாதித்து மாதவிடாய் விடுப்புக்கான மாதிரி மசோதாவை உருவாக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

‘பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பதைக் கட்டாயமாக்கினால் தொழி லாளர் சந்தையில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட அது காரணமாக அமையலாம். பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க நிறுவனங்கள் முன் வராத சூழலும் ஏற்படலாம். பெண்களின் நன்மைக்கு என நாம் முன்னெடுக்கும் திட்டம் அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடக் கூடாது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துதான் தற்போது விவாதமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்றதொரு கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE