பேசும் படம்: 20.05.18

By அன்பு

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

கொரியாவில் ஐந்தாவது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி் வீழ்த்தியது. இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர், சிறப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு வித்திட்டார்.

தன்பாலின உறவாளர்கள் குறித்து, கென்யாவைச் சேர்ந்த இயக்குநர் வனூரி கஹியூ இயக்கிய ‘ரஃபிகி’ திரைப்படம் கென்யாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிப்புமிக்க கான் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. விழாவில் இயக்குநர் வனூரி கஹியூ (இடமிருந்து முதல்) படத்தில் நடித்த நடிகைகள் ஷீலா முனிவா, சமந்தா முகாசியா ஆகியோருடன்.

பாலஸ்தீனப் பகுதிக்கு உட்பட்ட கெரீம் ஷாலோம் எல்லைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தில் போராட்டம் நடத்திவருபவர்களில் இரண்டு பெண்கள்.

தாமிரபரணி ஓடும் திருநெல்வேலியும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் தப்பவில்லை. திருநெல்வேலியை அடுத்த வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தண்ணீர் கேட்டு, காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்