பெண்கள் 360: முதல் நிதியமைச்சர்

By செய்திப்பிரிவு

பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர் என்கிற வரலாற்றைப் படைத்திருக்கிறார் ரேச்சல் ரீவ்ஸ். அண்மையில் நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தேர்தலில் ரேச்சல் சார்ந்திருக்கும் மைய – இடது சார்புத் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து அவரை நிதியமைச்சராக பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் நியமித்திருக்கிறார்.

ரேச்சலின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். இவர் 14 வயதில் செஸ் சாம்பியனாகத் திகழ்ந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவவியல், அரசியல், பொருளாதாரம் பயின்றார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து வங்கியில் பணிபுரிந்தார். 2010இல் நடைபெற்ற தேர்தலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தான் நிதியமைச்சராக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து ‘X’ தளத்தில், ‘இதைப் படித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்களுக்கும் பெண்களுக்கும் உங்கள் லட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது என்பதை இந்த நாள் உணர்த்தியிருக்கும்’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

முதல் தமிழ் எம்.பி.

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்
எம்.பி. என்கிற பெருமையை உமா குமரன் பெற்றிருக்கிறார். இவருடைய பெற்றோர் இருவருமே தமிழர்கள். 1980களில் இலங்கையில் குடியேறியவர்கள். பிரிட்டனின் மருத்துவத்துறை, பொதுத் துறை, வணிகம், பொருளாதாரம், கலை - கலாச்சாரம் எனப் பலவற்றிலும் தமிழர்கள் பங்களித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- க்ருஷ்ணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE