பெண் எனும் போர்வாள் - 30: தப்பிக்க முடியாத வாழ்நாள் தண்டனை?

By பிருந்தா சீனிவாசன்

நாம் உலக அளவில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கு இன்னும் 134 ஆண்டுகள் ஆகும் என உலகப் பொருளாதார மன்றம் அறிவித்திருக்கிறது. ஆணுக்கு நிகராகக் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டுவிட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் இந்நாளில் பாலின இடைவெளியை 64.1% மட்டுமே கடந்திருக்கிறோம். இந்த நிதர்சனத்தின் பின்னணியில் இருந்து பார்த்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? அதன் சிறுதுளியை பிரிட்டன் எழுத்தாளர் மோனிகா ஃபெல்டன் பதிவுசெய்திருக்கிறார்.

அன்றைய மதராஸ் மாகாணத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்த அவர், ஆர்.எஸ். சுப்பலட்சுமியைச் சந்தித்து அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்திருக்கிறார். ‘A child widow’s story’ என்கிற தலைப்பில் 1967இல் வெளியான அந்தப் புத்தகம், அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுச் சமையலறைக்குள் முடக்கப்படுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கொண்ட இளம் கைம்பெண், சமூகச் சீர்திருத்தவாதியாக பரிணமித்த நெடும்பயணத்தைச் சொல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE