வ
ன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டனப் பேரணி சென்னை சைதாப்பேட்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமார் 30,000-க்கும் மேற்பட்டோர் அந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் எரிச்சலடைந்த நடிகை கஸ்தூரி ‘கவர்னர் மாளிகை நோக்கி விசிக ஊர்வலம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களைப் பாதிக்கக்கூடிய இது போன்ற போராட்டங்களை ஃபேஷனாகவே அரசியல் கட்சிகள் நடத்துவது ஏன் என்பது தெரியவில்லை’ என்று ட்விட்டரில் பதிவுசெய்தார்.
kasturiஅதற்கு எதிர்வினையாக, ‘கஸ்தூரிக்கு இன்று சீக்கிரம் வீடு திரும்ப முடியவில்லை’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் எள்ளலுடன் பதிவிட்டார். அதற்கு எதிர்வினையாக, ‘விவாதத்தில் வெல்ல முடியாமல் / விபரீதம் பேசும் வீணன்’ என்று தொடங்கும் கவிதையை கஸ்தூரி பதிவிட்டார்.
இந்தக் கவிதை யுத்தத்தில் பலரும் போட்டி போட்டுக் குதிக்க, சமூக ஊடகங்கள் எதிர்க் கவிதைகளால் நிரப்பி வழிந்தன. எதிர்க் கவிதை வடிவின் பிதாமகனான சிலி நாட்டைச் சேர்ந்த நிகனோர் பர்ரா, இந்தக் கொடுமையையெல்லாம் பார்த்தால் என்ன சொல்லியிருப்பாரோ என்பது போன்ற விமர்சனங்களையும் பார்க்கமுடிந்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago