தலைவாழை: தக்காளியால் மணக்கும் சமையல்!

By ப்ரதிமா

 

கோ

டைக் காலத்தில் முக்கனிகளின் வரத்து அதிகமாக இருப்பதைப் போலவே தக்காளியும் அதிக அளவில் கிடைக்கும். விலையும் மலிவாக இருப்பதால் தக்காளியில் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம். தக்காளியில் செய்யக்கூடிய சுவையான உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை, போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

நெல்லூர் தக்காளி சாதம்

MG9787100 

என்னென்ன தேவை?

நன்கு பழுத்த தக்காளி – 4

சின்ன வெங்காயம் – 10

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உதிரியாக வடித்த சாதம் – 2 கப்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க

வரமிளகாய் – 6

கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

எள் – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1 சிறிய துண்டு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளியுங்கள். ஆறியதும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்குங்கள். பிறகு உப்பு, மஞ்சள் தூள், பொடித்து வைத்துள்ள கலவை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கிவிடுங்கள்.

ஊறுகாய்

_MG_9794100 

என்னென்ன தேவை?

தக்காளி – அரைக் கிலோ

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்

துருவிய வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 15

வறுத்துப் பொடிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளியுங்கள். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கிப் பின்னர் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு மஞ்சள் தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேருங்கள். பின்னர் வெல்லம் சேர்த்து நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். தக்காளியில் உள்ள தண்ணீரிலேயே எல்லாம் நன்றாக வெந்துவிடும். அதனால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

பச்சடி

_MG_9817100 

என்னென்ன தேவை?

தக்காளி – 6

சர்க்கரை

– 10 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி

– 1 டீஸ்பூன்

ஆரஞ்சு ஃபுட்கலர்

– கால் டீஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு

– 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நன்றாக வேகவிடுங்கள். தக்காளி பாதி வெந்ததும் அதனுடன் சர்க்கரை, ஃபுட்கலர் இரண்டையும் சேருங்கள். தக்காளியுடன் சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேருங்கள். ஏலக்காய்ப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள். இது மாலைவரை கெடாது.

குருமா

_MG_9824100 

என்னென்ன தேவை?

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 4

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

பச்சைப் பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்

பெரிய தக்காளி – 3

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சின்ன உருளைக் கிழங்கு – 1

கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 6 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – சிறிய துண்டு

முந்திரிப் பருப்பு -2 டேபிள் ஸ்பூன்

கசகசா, சோம்பு – தலா 1 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை – சிறிது

எப்படிச் செய்வது?

பச்சைப் பட்டாணியைப் பத்து நிமிடங்கள் ஊறவையுங்கள். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி, கசகசா, சோம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தக்காளியையும் சேர்த்து அரையுங்கள்.

வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்குங்கள். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, துருவிய கேரட் சேர்த்து இரண்டு கப் நீர் விட்டு வேகவிடுங்கள். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் ஊறவைத்துள்ள பட்டாணியைச் சேருங்கள். காய்கள் நன்றாக வெந்ததும் தயிரையும் அரைத்து விழுதையும் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள்.

ஸ்மூதி

_MG_9839100 

என்னென்ன தேவை?

தக்காளி – 6

கெட்டித் தயிர் – கால் கப்

சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

புதினா இலை – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

இரண்டு தக்காளியை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஃப்ரீசரில் வையுங்கள். உப்பு, சர்க்கரை, மீதமுள்ள தக்காளி, தயிர் ஆகியவற்றை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஃப்ரீசரில் வைத்த தக்காளிக் கட்டிகளைச் சேர்த்து மேலே புதினா இலைகளைத் தூவிப் பரிமாறுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்