கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:
வெனிசுலா நாட்டின் முக்கிய நகரமான வேலன்சியாவில் உள்ள சிறைச்சாலையில் சில நாட்களுக்கு முன் கலவரம் நடந்தது. இந்தக் கலவரத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட இறந்தவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியே கதறியழுத காட்சி.
அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் பலியாகினர். அந்நாட்டில் நிலவும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்துக்கு எதிராகப் புதிய சட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ‘Never Again’ என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தினார்கள்.
மாணவர்களின் கல்விக்காகக் குரல் கொடுத்துவரும் இளம் போராளி மலாலா யூசஃப்ஸாய் ஐந்தரை ஆண்டுகள் கழித்து, தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு கடந்த வியாழக்கிழமை சென்றார். அவரை அந்நாட்டு பிரதமர் ஷாஹித் அப்பாஸி வரவேற்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 7-வது ஜுனியர் உலக துப்பாக்கிச் சுடும் போட்டியில் 16 வயதான மனு பாகர் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
வசந்த காலத்தின் வரவைக் குறிக்கும் வகையில் ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு மார்ச் மாதமும் பூக்கும் செர்ரி மலர்களைப் பார்க்க உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு பூத்த மலர்களுடன் செல்பி எடுத்துகொள்ளும் இளம்பெண்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago