பெண் எழுத்து: மாற்றத்தின் மறுபக்கம்

By முகமது ஹுசைன்

பி

ரச்சினைகளும் அவற்றால் ஏற்படும் துயரங்களும் வீரியம் கொள்ளும்போதெல்லாம் அவற்றுக்கான தீர்வாகச் சமூகம் சில மாற்றங்களை முன்வைக்கிறது. ஆனால், அந்த மாற்றங்கள் எப்போதும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் சடுதியில் நிகழ்ந்து மனிதர்களின் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகின்றன. அத்தகைய வரலாற்று நிகழ்வு ஒன்றின் கோர தாண்டவத்தை இளம் பெண் ஒருவரது பார்வையின் மூலம் விரியச்செய்வதே அயன் ரேண்டின் ‘வி தி லிவ்விங்’.

கம்யூனிசத்தின் மறுபக்கத்தை, அதனால் பாதிப்புக்குள்ளான முதலாளிகளின் குடும்பத் துயரங்களை அழுத்தத்துடனும் ஆவேசத்துடனும் இந்த நாவல் பதிவுசெய்துள்ளது. சோவியத் புரட்சிக்குப் பின்னான காலம்தான் இந்தக் கதையின் களம்.

துயரமும் வசந்தமும்

தலைமறைவு வாழ்வுக்குப் பிறகு பெட்ரோகிராட் நகருக்குப் பிழைக்க வழிதேடி தன் குடும்பத்துடன் கிரா வருவதாகக் கதை தொடங்குகிறது. அங்கே செஞ்சேனையின்எழுச்சியாலும் அதன் வெற்றியாலும் தங்கள் நூற்பாலையை இழந்து, சொந்த வீட்டிலேயே பலருடன் ஒண்டி வாழும் துயர நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

தந்தைக்கு வேலை கிடைத்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. புரட்சிக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இனிக் கனவிலும் சாத்தியமல்ல என்பதை கிராவால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிரா தொடர்ந்து போராடி அனுமதியைப் பெற்று, பொறியியல் படிக்கிறாள்.

அங்கு அவளுக்கு கம்யூனிச சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்புகொண்ட ஆண்ட்ரேய் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அங்கு எதிர்பாராதவிதமாகத் தான் சந்திக்கும் லியோ மீது காதல் கொள்கிறாள். லியோவுடனான காதல் மட்டுமே அவளது வாழ்வின் வசந்த காலம்.

சித்தாந்தப் பார்வை

லியோவுடன் சேர்ந்து நாட்டைவிட்டு அவள் தப்ப முயலும் காட்சிகளின் மூலமும் காசநோயால் தாக்கப்பட்ட லியோவைக் காப்பாற்ற மேற்கொள்ளும் போராட்டங்களின் மூலமும் கம்யூனிச சித்தாந்தத்தின் மறுபக்கத்தை, அன்றைய ஆட்சியின் அவலத்தை விவரிப்பதில் அயன் ரேண்ட் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஆண்ட்ரேய் உடனான கிராவின் விவாதங்களின் மூலம் அயன் ரேண்ட் கம்யூனிசத்தின் மீதான தன் கோபத்தைத் தணித்துக்கொள்கிறார். குறிப்பாக, “மனிதர்கள் அனைவரும் தனித்துவம் மிக்கவர்கள். அவர்களை ஒரு சித்தாந்தத்தின் கீழ் கொண்டுவர முயல்வது சதுரத்தை வட்டத்துக்குள் நுழைப்பதைப் போன்றது” என்று அவர் சொல்வது.

இந்த நாவலை எழுதும்போது அவருக்கு 25 வயது. இந்த நாவலின் பிரச்சினையும் அதுதான். ஒரு வரலாற்று நிகழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்யும்போது, முதிர்ச்சியின்மையால் நாவல் முழுவதும் கதாபாத்திரங்களின் குரல்களை மீறி அயன் ரேண்டின் குரல் துருத்திக்கொண்டு ஒலிப்பது நெருடலாக உள்ளது. ஆரம்பத்தில் இந்த நாவலைப் பிரசுரிக்க யாரும் முன்வரவில்லை. அயன் ரேண்டின் இரண்டாம் நாவலின் வெற்றிக்குப் பின்தான் இது பரவலான வரவேற்பைப் பெற்றது.

ஆனால், இந்த நாவலின் சாயலையொத்த, அதற்குப் பின் வெளியான ‘டாக்டர் ஷிவாகோ’ எனும் நாவல் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதன் ஆசிரியர் போரிஸ் பாஸ்தெர்னாக், அந்த நாவலின் முகப்பில் மட்டுமே இருப்பார். அதனால்தான் அவருக்கு நோபல் பரிசும் அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்குப் பல ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தனவோ என்னவோ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்