பெண் எனும் போர்வாள் - 23: அடிமைச் சின்னமல்ல ஆடை

By பிருந்தா சீனிவாசன்

ஆடை என்பது எல்லாக் காலத்திலும் பெண்ணின் ஒழுக்கத்துடனும் கண்ணியத் துடனும் நேரடித் தொடர்பில் இருப்ப தாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆடையை வைத்தே ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை அளவிடும் ஆணாதிக்கச் சமூகம், அந்தப் பெண்ணின் அல்லது அவள் சார்ந்த குடும்பம்/சமூகத்தின் கண்ணியத்தைக் குலைக்க வேண்டும் என்றால் அதே ஆடையைத்தான் ஆயுதமாகவும் கையில் எடுக்கிறது. புராணக் கதைகள் தொடங்கி மணிப்பூர் கலவரம் வரை இதுதான் நிதர்சனம்.

வியாச மகாபாரதத்தில் அல்லாமல் தமிழகத்தில் சொல்லப்படும் மகாபாரக் கதையில் கர்ணன் – துரியோதனன் நட்பின் ஆழத்தை விளக்கும் காட்சி ஒன்று உண்டு. துரியோதனன் மனைவி பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கையில் கணவரைப் பார்த்ததும் பாதி விளையாட்டில் பானுமதி எழுந்துகொள்கிறார். தோற்றுவிடுவோமோ எனப் பயந்துதான் பானுமதி எழுந்து கொண்டார் என நினைத்துத் தொடர்ந்து விளையாட வரும்படி அவரது ஆடையை கர்ணன் பிடித்து இழுக்கிறார். அதைப் பார்த்துவிட்ட துரியோதனன் தங்கள் இருவரையும் தவறாக நினைக்கக்கூடும் என கர்ணனும் பானுமதியும் கலங்கி நிற்க, அந்தச் சூழலை துரியோதனன் மிக இயல்பாகக் கடந்துசெல்கிறார். அந்நிய ஆடவனால் தன் மனைவியின் ஆடை இழுபட்டபோது அந்தச் செய்கையால் தன் மனைவியின் கண்ணியம் குறைந்துவிடாது என நம்பிய துரியோதனன்தான் பாண்டவர்களின் கண்ணியத் தைக் குலைக்க பாஞ்சாலியைச் சபை நடுவில் துகிலுரித்தார். இரண்டு சம்பவங்களிலும் பெண்ணின் ஆடை பறிக்கப் படுவதுதான் மையம். ஆனால், ஒன்று நட்பைப் பெருமைப் படுத்த, மற்றொன்றோ பெண்ணைச் சிறுமைப்படுத்துகிறது. முன்னதைவிடப் பின்னதைத்தான் நம் சமூகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. பெண்ணை ஆடையின் பெய ரால் வெவ்வேறு வகைகளில் அடிமைப்படுத்தியும் வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE