வாசிப்பை நேசிப்போம்: நினைவில் நிற்கும் எழுத்து

By Guest Author

‘விமானப் பயணத்தைவிட ரயில் பயணமே நாங்கள் விரும்புவது; ஏனெனில், அப்போதுதான் நிறைய புத்தகங்களை வாசித்துக்கொண்டே செல்ல முடியும்’ என்று அறிஞர்கள் பலர் சொல்லியிருப்பதைப் படித்தும் கேள்விப்பட்டும் இருக்கிறேன். அன்று தொடங்கிய வாசிப்புப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. புடவை, நகை போன்றவற்றுக்கு எப்போது தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்பதைவிடப் புத்தகங்களுக்கு எப்போது தள்ளுபடி என்பதைத் தெரிந்துகொண்டு முதல் ஆளாக அவற்றை வாங்கிவிடுவேன்.

சென்னையில் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்களைப் பார்த்து, வாங்கிப் படித்து மகிழ்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. கரோனா காலத்தில் புத்தகக் காட்சி நடைபெறாதது பெரும் ஏக்கமாக இருந்தது. லக் ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, அனுராதா ரமணன், மெரீனா (பரணீதரன் எழுதியவை, நாடக வடிவில் வரும்) போன்றோரது படைப்புகளை ஒன்றுவிடாமல் படிப்போம். அவர்கள் எழுதிய வரிகள் இன்றும்கூட எனது மனதைவிட்டு அகலவில்லை.

எஸ்.ராஜகுமாரி

புத்தக வாசிப்புடன் நாளிதழ், வார இதழ்களின் வாசிப்பும் தொடர்ந்தது. வார இதழ்களின் சமையல் பக்கங்களுக்குப் பங்களிக்கும் வாய்ப்பு அதன் வாயிலாக வாய்த்தது. ‘புத்தகங்கள் செலவு அல்ல, சேமிப்பு’ என்பதை உணர்ந்ததால் மற்றவர்களுக்கும் பயன்படும்விதமாக என் வீட்டில் 1,000 புத்தகங்கள் அடங்கிய சிறு நூலகத்தை நடத்திவருகிறேன்.

- எஸ்.ராஜகுமாரி, போரூர், சென்னை.

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்