யு
னெஸ்கோவின் கலாச்சார நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டிருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்திருக்கின்றனர் கலைஞர்கள். சென்னையின் பல்வேறு இடங்களில் நடந்த நாட்டிய நிகழ்வுகளில் பரத நாட்டியம், மோகினியாட்டம், கதக் போன்ற நாட்டியங்களும் அரங்கேறின.
தாண்டவமும் லாஸ்யமும்
கம்பீரமாக உடுக்கை ஒலிக்கச் சிவதாண்டவம் ஆடும்போது ‘ருத்ர’ ருக்மிணியாகத் தெரிபவர் அடுத்த நொடியில் நளினமான பாவத்தை முகத்தில் தேக்கிச் சாந்தசொரூபியாகவும் மாறுகிறார். இந்த ஆண்டு திருவையாற்றில் நடந்த நாட்டிய விழாவிலும் ருக்மிணி விஜயகுமார் பங்கெடுத்திருக்கிறார்.
மறையாத மரபுகள்
தபஸ்யா கலா சம்பிரதாயாவின் ‘மறைந்துவரும் மரபுகள்’ என்னும் 20 நிமிட ஆவணப்படம் ‘தத்வலோகா’ அரங்கில் திரையிடப்பட்டது. இது தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாப்பூர் போன்ற இடங்களில் இருந்த கலைஞர்களைப் பற்றிய அரிய பதிவு. இந்த ஆவணப் படத்தில் தஞ்சை நால்வர் பரம்பரையில் வந்த நாட்டிய ஆசான் கிட்டப்பா பிள்ளை, சுப்பராய பிள்ளை , லக்ஷ்மி நைட், பி.ஆர். திலகம் போன்றவர்கள் பேசிய பதிவு இடம்பெற்றிருந்தது.
“இவர்கள் யாருமே தற்போது நம்மிடையே இல்லை என்னும் நிலையில் இந்த ஆவணப்படத்தின் அவசியமும் மதிப்பும் அதிகரிக்கிறது” என்றார் தபஸ்யா கலா சம்பிரதாயாவின் இயக்குநர் ஜெயந்தி வர்மா. அவருடைய மாணவிகளான ஸ்வேதா ராகவன், ஷில்பா ராகவன், கிருத்திகா சீனிவாசன் ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
DSC_1206 ஜெயந்தி வர்மா rightஅதில் சுவாதித் திருநாளின் வர்ணம், தஞ்சை நால்வரின் ஜதிஸ்வரம், தில்லானா போன்றவை ஆடப்பட்டன. இவர்கள் பந்தநல்லூர் எம்.கோபாலகிருஷ்ணன், கொண்டி பரம்பரையில் வந்த தஞ்சாவூர் பி.ஆர்.திலகம் ஆகியோரின் வழிநடத்துதலில் ‘பல்லக்கி சேவா பிரபந்தம்’ போன்ற பல மரபார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து நாட்டியம் ஆடியவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
விறுவிறு லாவணி
மியூசிக் அகாடமியின் நாட்டிய கலாநிதி விருதைப் பெற்றிருக்கும் லக்ஷ்மி விஸ்வநாதன் அமேதிஸ்ட் அரங்கத்தில் பரத நாட்டியம், மோகினியாட்டம், லாவணி நடனக் கலைகருக்கு மேடை ஏற்படுத்தித் தந்தார். சமர்த்தியா மாதவன், மதுமதி ஆகியோர் முறையே பரத நாட்டியம், மோகினியாட்டம் ஆடினர். இறுதியாக மேடையேறிய சுப்ரியா காரத் ஆடிய லாவணி நடனம் அரங்கில் இருப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
17-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிர மன்னர்கள் ஆண்ட தஞ்சை அரண்மனையில் பரத நாட்டியம் போன்றே ஆடப்பட்ட இன்னொரு நாட்டிய வகை லாவணி. கேலியும் கிண்டலுமாக வரிசை கட்டும் வார்த்தைகளில் உள்ளடக்கமாக சிருங்காரமும் ஒளிந்திருக்கும்.
“மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரிலிருந்து கலாக்ஷேத்ராவுக்குப் பரதம் கற்க வந்த முதல் பெண் நான்” எனச் சொல்லும் சுப்ரியா காரத், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துகலைகளில் பதம், ஜாவளி மற்றும் லாவணிக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஒப்புநோக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வைச் செய்யவிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago