கா
ஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சனா, யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சாதனை முயற்சிகளைச் செய்து வருகிறார்.
காஞ்சிபுரம் பங்காரு ஏசப்பர் தெருவில் வசிக்கும் இவர் ஒரு வழக்கறிஞர். 2016-ல் 57 மணி நேரம் தொடர்ச்சியாக யோகாசனம் செய்தார். இதன் மூலம் நீண்ட நேரம் யோகாசனம் செய்த பெண் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
சாதனையை முறியடிக்கும் சாதனை
ஆனால், கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரதன்யா பட்டேல் என்பவர் 103 மணி நேரம் யோகாசனம் செய்து இவரது சாதனையை முறியடித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 150 மணி நேரம் யோகாசனம் செய்வதற்கான நிகழ்ச்சியை ரஞ்சனா தொடங்கினார். ஆனால், 162 மணி நேரம் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாகச் செய்துள்ளார். தொடர்ந்து உணவு, உறக்கம் இல்லாமல் இந்த யோகாசன சாதனையைச் செய்துள்ளார். இதனால் தற்போது இவரது பெயர் மீண்டும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ranjana1 யோகாசனத்தில் ஈடுபட்டுள்ள ரஞ்சனா விழிப்புணர்வே நோக்கம்
“நான் மஹா யோகம் அமைப்பின் மூலம் யோகா பயிற்சி பெற்றேன். 37 மாணவர்களைக் கொண்டு நீண்ட நேரம் யோகாசனம் செய்யக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். நீண்ட நேரம் யோகாசனம் செய்த எனது சாதனை முறியடிக்கப்பட்டதால் தற்போது 162 மணி நேரம் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்துள்ளேன். இது கின்னஸ் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தற்போது ஆய்வில் உள்ளது. 12 வாரங்களுக்குப் பிறகே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் என் பெயர் இடம் பெறும்” என்று ரஞ்சனா பெருமிதத்துடன் சொல்கிறார்.
“கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக மட்டும் இதை நான் செய்வதில்லை. இது போன்ற சாதனைகள் மூலமாக யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதால்தான் நான் இதில் ஈடுபட்டேன்” என்கிறார் ரஞ்சனா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago