கதைப் புத்தகங்களை மட்டுமே விரும்பிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’ ஆகிய இரண்டு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார் என்னுடைய கணவர். அவர் நிறைய புத்தகங்களைப் படித்து அவற்றில் வரும் கருத்துகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தது என்னைப் பல புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டியது. ‘தேசாந்திரி’ புத்தகம் பயண அனுபவங்களை அழகாகப் பகிர்ந்தது. புத்தக வாசிப்பின் மூலம் நானும் ஆசிரியரோடு பல இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது. தன்னைப் பாதித்த எழுத்தாளர்களின் கதைகளோடு தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்துச் சுவைபட எழுதிய புத்தகம் ‘கதாவிலாசம்’; கதைகளின் விலாசம். அருமையான புத்தகம்.
‘சஞ்சாரம்’ புத்தகத்தில் கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், நாகஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள், பாராட்டுகள், சோதனைகள் என அனைத்தையும் அவர்களோடு பயணித்து எழுதியது அருமை. எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புத்தகத்தையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம். அவரின் எழுத்து மனிதர்களின உணர்வுகள் எப்படி ஆளாளுக்கு மாறுபடுகிறது என்பதையும் அவர்களை எவ்வாறு மரியாதையுடன் அணுக வேண்டும் என்பதையும் அழகாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் விரும்பிப் படிப்பேன். படித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளை நானும் என்னுடைய கணவரும் குழந்தைகளும் பரிமாறிக்கொள்வோம். என்னுடைய பிள்ளைகளும் நிறைய புத்தகங்களைத் தேடிப் படிக்கிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் புத்தகங்களின் மூலம் இயற்கை வேளாண் முறையைக் கற்றுக்கொண்டு வீட்டுத்தோட்டம் அமைத்து 700க்கும் மேற்பட்ட செடிகளை இயற்கை முறையில் பராமரித்துவருகிறேன். சு.வெங்கடேசன் எழுதிய ‘வைகை நதி நாகரிகம்! - கீழடி குறித்த பதிவுகள்’ புத்தகமும் என்னை மிகவும் கவர்ந்தது.
புத்தக வாசிப்பு நம்மைத் தனி உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. என் வாழ்க்கையில் அனைத்துச் செயல்களிலும் புத்தகங்களின் பங்கு உள்ளது. என் வீட்டில் சிறு்நூலகம் அமைத்திருக்கிறேன். என் வீட்டுக்கு அருகிலுள்ள மாநகராட்சிப் பள்ளி நூலகத்துக்கு 400 புத்தகங்களுக்கு மேல் வழங்கினோம். புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கும் நிறைய புத்தகங்களைப் பரிசளித்திருக்கிறோம். என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டிருக்கிற புத்தகங்கள் எனக்கு நல்ல தோழியாக – ஆசானாக - வழிகாட்டியாக இருக்கின்றன.
- கருணாம்பிகா பாலகிருஷ்ணன், உடையாம்பாளையம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago