மாற்றுப் பாதை: நேரத்தை மிச்சப்படுத்தும் அடுப்பு

By எம்.சூரியா

 

ந்தியாவின் குக்கிராமங்கள் பலவற்றில் இப்போதும் விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். விறகு, மாட்டுச் சாணம் ஆகியவற்றைப் போட்டு எரிப்பதால் அடுப்பிலிருந்து வெளியேறும் புகை மாசு, ஆயிரக்கணக்கணக்கான பெண்களுக்குச் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத அதேநேரம் பயன்படுத்துவதற்கு எளிதான சமையல் அடுப்பைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய நேஹா ஜுனுஜோ, இன்று பல கிராமப்புறப் பெண்களுக்கு விடிவெள்ளி!

புதிய முயற்சி

டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்த நேஹா, கார்ப்பரேட் நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருந்தும் அதை ஏற்கவில்லை. கிராமப்புறப் பெண்களின் புகையுடனான போராட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் அவர்களது விலைமதிப்பில்லாத நேரம் சமையலில் வீணடிக்கப்படுவதை மாற்றவும் வேண்டும் என நினைத்தார். ஆகவே, ‘கிரீன்வே கிராமின் இன்ஃப்ரா’(Greenway Grameen Infra) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன் மும்பையில் தொடங்கினார்.

அங்கித் மாத்துர் என்பவருடன் இணைந்து இவரது நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட் ஸ்டவ், ஏழை மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. இதைச் சாத்தியப்படுத்த இவர்களுக்குப் பல மாதங்கள் ஆகின. மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் , பெண்களின் சமையல் முறை குறித்து நேஹா கள ஆய்வு செய்தார். இவரது நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஸ்மார்ட் ஸ்டவ், அந்த ஐந்து மாநிலங்களிலும் பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டது. ஏழைப் பெண்கள் வாங்க வேண்டும் என்றால் அதன் விலையும் குறைவாகத்தானே இருக்க வேண்டும்? அதற்காகப் பல்வேறு ஆய்வுகளைச் செய்து 1,800 ரூபாய்க்கு ஓர் அடுப்பையும் 3,000 ரூபாய்க்கு மேம்படுத்தப்பட்ட அடுப்பையும் இவர்கள் தயாரித்தனர்.

அலுமினியம், ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்டவ், சமையல் புகையைச் சுமார் 20 சதவீதமாகக் குறைத்தது. மரக் கிளைகள், சாணம், விறகு என்று எதை வைத்து வேண்டுமானாலும் இந்த ஸ்மார்ட் அடுப்பைப் பெண்கள் பயன்படுத்த முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு. அடுப்பைத் தயாரித்த பிறகு நேஹாவே கிராமம் கிராமமாகச் சென்று இந்த அடுப்பை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொடுத்தார். சமையலில் கழியும் நேரம் இந்த ஸ்மார்ட் அடுப்பால் 30 சதவீதமாகக் குறைந்ததால் கிராமப் பெண்களுக்கும் மகிழ்ச்சி! அதன் விளைவாக இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அடுப்புகள் விற்பனையாகிவிட்டன.

சிறு கடன் திட்டம்

ஆரம்ப காலத்தில் விலை குறைந்த இந்த பயோ மாஸ் அடுப்புகளை விற்க யாரும் முன்வரவில்லை. இதில் அதிக லாபம் கிடைக்காது என்பதும் அதற்குக் காரணம். இதனால் மனம் தளர்ந்து விடாத நேஹா, சிறு கடன் நிறுவனங்களுடன் கைகோத்தார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 70 ஆயிரம் அடுப்புகளை விற்றிருக்கிறார்கள்.

எளிய தவணை முறையில் விற்கப்படும் இந்த அடுப்பை வாங்கும் மக்கள், வாரம் 65 ரூபாயைத் தவணையாகச் செலுத்திவருகின்றனர். 30 வாரங்களிலேயே சம்பந்தப்பட்ட நபருக்குச் சொந்தமாகிவிடும் ஸ்மார்ட் அடுப்பு, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்வரை தங்கு தடையின்றி நீடித்து உழைக்கும் என்பதும் இதன் மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி நேபாளம், வங்கதேசம், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கும் இந்த அடுப்புகள் ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்