போகிற போக்கில்: வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட்

By பி.டி.ரவிச்சந்திரன்

லைகளின் இளவரசி என்றழைக்கப்படும் இயற்கை எழில் சூழ்ந்த கொடைக்கானலின் சிறப்புகளில் ஒன்று ‘ஹோம் மேடு’ சாக்லேட்கள்.

பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைக் கலந்து விதவிதமான சுவைகளில் தனித் தனி ரகங்களாக சாக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன. முன்பு இவை வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்தன. தற்போது இயந்திரங்கள் மூலமும் தயாராகின்றன.

தொட்டதுமே இளகிவிடும் மென்மையில் இந்த சாக்லேட்டை வீட்டிலேயே செய்யலாம் என்று சொல்கிறார் கொடைக்கானலைச் சேர்ந்த கே.விஜயராணி. அதன் செய்முறையையும் அவர் விளக்குகிறார்:

“வெள்ளை, கறுப்பு இரண்டு நிறங்களும் கலந்த சாக்லேட் பார்கள் கடைகளில் கிடைக்கின்றன. பார்களை வாங்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவையுங்கள். கொதிக்கும் தண்ணீருக்குள் ஒரு பாத்திரத்தை வைத்து சாக்லேட் துண்டுகளை அதில் போட வேண்டும். தண்ணீரின் சூட்டில் சாக்லேட் பார் இளகத் தொடங்கும். அதை நன்றாகக் கிளறி இறக்குங்கள். பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

சாக்லேட் கலவையை அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பருப்புத் துண்டுகளைச் சேர்த்துக் கிளறுங்கள். பின்னர், ஒரு டிரே அல்லது இதற்கெனத் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் (கடைகளில் சாக்லேட் அச்சுகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன) இந்தக் கலவையை ஊற்றி ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்குள் சாக்லேட் கலவை கெட்டித்தன்மை அடைந்துவிடும். பிறகு இதை எடுத்துச் சாப்பிடலாம்” என்றார்.

விரும்பினால் நமக்குப் பிடித்த சுவையூட்டிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். இதேபோல் முந்திரி, பிஸ்தா, பாதம் பருப்பு ஆகியவற்றை ஒரே சாக்லேட் கலவையில் கலக்காமல் தனித் தனியாகக் கலந்தும் செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்