‘தி
இந்து’ தமிழ் நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் திருநெல்வேலி, வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் மகளிர் திருவிழா டிசம்பர் 17-ம் தேதி நடந்தது.
வாசகியர் தொடங்கிவைத்த விழா
நெல்லையைச் சேர்ந்த முத்துலட்சுமி, முப்பிடாதி இருவரும் விழா அரங்கின் வாயிலை அழகான கோலமிட்டு அலங்கரித்தார்கள். தென்காசியைச் சேர்ந்த தைலாம்பாளும் மீனாட்சிபுரத்திலிருந்து விழாவுக்கு வந்திருந்த ஜெயலட்சுமியும் குத்துவிளக்கை அலங்கரித்தனர்.
சிறப்புரை ஆற்றிய கெட்ஸி லீமா அமலினி, பெண்கள் தங்களது சிறப்பியல்புகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.
அன்பை விட்டுவிடாதீர்கள்
“பெண்கள் என்றால் அன்பு. பெண்கள் பெண்களாகவே இருக்க வேண்டும். அன்பு, பொறுமை உள்ளிட்ட இயல்புகளை அவர்கள் விட்டுவிடக் கூடாது. வள்ளுவர் சொன்னதுபோல் இன்னா செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும். அதைச் சொல்லிக்காட்டக் கூடாது. அன்பால் எதையும் ஜெயித்துவிடலாம். அன்பு காட்டினால் நம் பின்னால் ஒரு கூட்டம் இருக்கும். பகைமை காட்டினால் நமது பின்னால் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்.
tilan_chief guest (4) கெட்ஸி லீமா அமலினி rightஇன்று நாம் சொல்வதைப் பிள்ளைகள் கேட்பதில்லை. ஆனால், நாம் செய்வதைப் பார்த்து அதன்படி நடந்துகொள்வார்கள். பெண்களை நாட்டின் கண்கள் என்கிறார்கள். எனவே, கண்கள்போல நாம் இருக்க வேண்டும். நல்லவற்றையே பார்க்க வேண்டும், நினைக்க வேண்டும், செய்ய வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை நாம் கற்றுக்கொள்வதுடன் பிறகுக்கும் கற்றுத்தர வேண்டும்.
இந்த உலகில் பெண்களுக்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்படுகிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்து நாம் நடக்க வேண்டும்” என்றார் அவர்.
சைபர் குற்றங்களைக் களைவதில் நம் பங்கு
குற்றங்களைத் தடுப்பது, அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது ஆகியவை குறித்துப் பேசினார் பேராசிரியர் பியூலா.
“இணையத்தைப் பயன்படுத்தும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். பணம் பறிக்கும் நோக்கில் முதலில் சைபர் கிரைம்கள் நடந்தன. மக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டு போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு பணத்தை அபகரித்தனர். இப்போது அதையும் தாண்டி வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதற்குத் தொடர்ந்து கண்காணிப்பு உணர்வுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
கணினி, இணையம் ஆகியவற்றைக் குழந்தைகள் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணினியை வீட்டில் உள்ள பொதுவான அறையில் வைக்க வேண்டும். கணினி, மின்னஞ்சல் ஆகியவற்றுக்குப் பிறர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கடினமான பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு எண், தனிப்பட்ட விவரங்கள் போன்றவற்றைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வரும். இவையெல்லாம் மக்களை ஏமாற்றி, மோசடி செய்வதற்காக வருபவை. எந்த வங்கியும் இதுபோன்ற விவரங்களைக் கேட்பதில்லை. கம்ப்யூட்டரில் பாதுகாப்பு டிவைஸ்களை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சைபர் குற்றங்களைத் தடுக்க ஐடி சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாமும் உதவ வேண்டும். சைபர் கிரைம் நடக்கக் காரணங்களை அறிந்துகொண்டு அவற்றைக் களைய முற்பட வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து, வாசககிகளின் சந்தேகங்களுக்கு பியூலா சேகர் பதிலளித்தார்.
பாகுபாடு இருக்கிறதா இல்லையா?
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் பாகுபாடு காட்டுகிறார்களா, இல்லையா என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடந்தது. கடையநல்லூரில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் வேலம்மாள் முத்தையா நடுவராகப் பங்கேற்றார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறை (சுயநிதிப் பிரிவு) பேராசிரியர் முனைவர் இரா. அனுசியா ‘பாகுபாடு காட்டுகிறார்கள்’ என்றும் பாளையங்கோட்டை தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் இந்திரா ‘பாகுபாடு இல்லை’ என்றும் பேசினர்.
“குழந்தைகள் வளர்ப்பில் பெண் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள். கடைசி காலத்தில் ஆண் பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்பது பெற்றோர்களின் நினைப்பு. ஆனால், பெண் பிள்ளைகள்தான் பெற்றோர்கள் மீது கரிசனத்தோடும் அக்கறையோடும் இருக்கிறார்கள். பாரபட்சம் காட்டும் போக்கு மாற வேண்டும்” என்று தீர்ப்பளித்தார் வேலம்மாள் முத்தையா.
காலை நிகழ்ச்சிகளை பாளையங்கோட்டை சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எஸ்.ஜெயமேரி தொகுத்துவழங்கினார்.
திருநெல்வேலி சங்கர் நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூபிளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் வாசகிகளை உற்சாகப்படுத்தின. திருநெல்வேலி கரையிருப்பு பகத்சிங் கலைக்குழுவினரின் தப்பாட்டமும் வாசகியரை ஆடவைத்தது.
கொட்டித் தீர்த்த பரிசுமழை
மதிய உணவுக்குப் பிறகு வாசகியரைப் பரிசளித்து மகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பந்து பாஸ் செய்யும் போட்டி, முகத்தில் பொட்டுக்களை ஒட்டும் போட்டி, பலூன் ஊதும் போட்டி, மைம் நடிப்புப் போட்டி உள்ளிட்ட வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற வாசகியருக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவருக்குமே பரிசுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலியைப் பற்றிய கேள்விகள், அன்றைய ‘பெண் இன்று’ இதழ் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலளித்த வாசகியருக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. விழாவுக்கு வந்த அனைவருக்குமே நிச்சயப் பரிசு வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்லம்மாள், வண்ணார்பேட்டையைச் சேர்ந்த எஸ்.அழகம்மாள், வள்ளியூரைச் சேர்ந்த ஆர்.வி.கவிதா ஆகியோருக்குச் சிறப்பு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. பிற்பகல் நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்துவழங்கினார். வாசிகியரின் உற்சாக நடனத்தோடு விழா இனிதே நிறைவுபெற்றது.
நெல்லை மகளிர் திருவிழாவை ‘தி இந்து’வுடன், தைரோ கேர், தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, ஜெப்ரானிக்ஸ், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சாம்சன் கிச்சன், மயூரி டிவி ஆகியவை இணைந்து வழங்கின.
போட்டிகளில் வெற்றிபெற்ற வாசகிகளுக்கு சாஸ்தா கிரைண்டர்ஸ், பிருத்வி, உடுப்பி ருசி, கோகுல் சாண்டல் சோப், பிரீமியம் குவாலிட்டி புட்ஸ், பொன்வண்டு டிடெர்ஜென்ட், ராஜேஷ் எலெக்ட்ரிகல்ஸ், ஒன்டர்பீட் பிளாசம் கார்டன் சென்டர், அன்னை டேட்ஸ், சிங்கர் கிரேஸ் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பரிசுகளை வழங்கின.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
36 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago