இ
ந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஆடவர் அணி வென்ற மகிழ்ச்சி மறைவதற்குள் ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் ஹாக்கி மகளிர் அணியும் ஆசியக் கோப்பையை வென்று அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிவிட்டது. அதுவும் கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கடைசி இடத்தைப் பிடித்த மகளிர் அணி, ஓராண்டில் ஆசிய சாம்பியனாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஜப்பானில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய மகளிர் அணி பங்கேற்கும்வரை, அந்த அணி விஸ்வரூபம் எடுக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். தென் கொரியா அல்லது ஜப்பான் அணி கோப்பையை வெல்லும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்தனை கணிப்புகளையும் பொய்யாக்கி, மகளிர் அணி கோப்பையை வென்று மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. எட்டு அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக இந்தியாவும் சீனாவும் மோதியதிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
நவம்பர் 5 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் என்ற நிலைதான் இருந்தது. அதற்கேற்ப இறுதிப் போட்டியில் அனல் பறந்தது. இரு அணிகளும் கோல் போடுவதில் மும்முரம் காட்டின. இரண்டு அணிகளுமே எதிர் அணி கோல் அடிக்காமல் இருக்க மெச்சும்படியான தடுப்பாட்டத்திலும் அக்கறை காட்டின. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளுமே தலா ஒரு கோல் அடித்துச் சமநிலையில் இருந்தன. எனவே, வெற்றியைத் தீர்மானிக்க ‘பெனால்டி ஷூட்அவுட்’ முறை வந்தது. இதுதான் இந்திய மகளிர் அணிக்குக் கோப்பை பெற்றுத் தந்த ஆயுதம்!
பெனால்டி ஷூட்அவுட்டில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். வழங்கப்பட்ட ஆறு வாய்ப்புகளில் ரிது ராணி, மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், லிலிமா மின்ஸ் ஆகியோர் வெற்றிகரமாக ஐந்து கோல்களை அடித்து அசத்தினர். ஆனால், சீன வீராங்கனைகளால் நான்கு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் ஆசியக் கோப்பையைத் தட்டி வந்தது.
நான்கு வீராங்கனைகள் ஐந்து கோல்கள் அடித்து இந்தியாவை வெற்றிக்குப் பக்கத்தில் நிறுத்தினாலும், கோல்கீப்பர் சவிதாவின் அட்டகாசமான தடுப்பாட்டம்தான் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது. இந்தப் போட்டி இன்னொரு வகையில் இரண்டு அணிகளுக்குமே நெருக்கடியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதில் வெற்றிபெறும் அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் என்ற நிலையும் இருந்தது. பெனால்டி ஷூட்அவுட்டில் சீனாவின் ஒரு கோலை சவிதா தடுத்ததால்தான், இன்று இந்திய மகளிர் அணி உலகக் கோப்பைக்கும் நேரடியாகத் தகுதிபெற முடிந்திருக்கிறது.
இதற்கு முன்பு மகளிர் ஹாக்கி அணி, 2004-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பையை வென்றிருந்தது. அதன் பிறகு இப்போதுதான் வெற்றியை ருசித்திருக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அப்போதைய ஹாக்கி ஆசியக் கோப்பையை ஆடவர் அணியும் வென்றிருந்தது. இப்போதும் இரு அணிகளுமே வெற்றியை வசப்படுத்தியிருக்கின்றன. ஆடவர் அணி ஒட்டுமொத்தமாக மூன்று முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள நிலையில், மகளிர் அணி இரண்டு முறை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது.
இந்த ஆசியக் கோப்பையில் மகளிர் அணியின் ஆட்டம் வியக்க வைக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தது. அத்துடன் ஆசியக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி தோல்வியடையவில்லை. ஒட்டுமொத்தமாக 28 கோல்களை அடித்தது, அதேநேரத்தில் வெறும் ஐந்து கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது. இந்த அசாத்திய சாதனையை இந்திய மகளிர் அணி படைப்பது இதுதான் முதல்முறை. உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி,இந்த அதிரடி வெற்றிக்குப் பிறகு 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago