ஆழ்ந்த இசை ஞானமும் அபாரமான குரல் வளமும் சேர்ந்து சாஷா திருபதியை முன்னணிப் பாடகியாக்கியிருக்கின்றன. காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்து கனடாவில் பல ஆண்டுகள் வசித்து தற்போது மும்பையில் வசிப்பவர். பாடகி, வாத்தியக் கலைஞர், கவிஞர் (டி.இமானின் இசையில் உருவான ‘சிலுக்கு மரமே’ பாட்டின் இடையில் ஒலிக்கும் ஆங்கில வரிகளுக்குச் சொந்தக்காரர்!) எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு.
இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்களைத் தகுந்த பயிற்சியின் மூலம் பெற்றிருக்கும் சாஷாவுக்கு இந்திப் படவுலகில் பாடுவதற்குத்தான் முதலில் வாய்ப்புகள் வந்தன. ‘ஓகே ஜானு’ இந்திப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘ஹம்மா’ பாடலை முணுமுணுக்காத உதடுகள் குறைவு. இந்தப் பாடல்தான் யூடியூபில் (209 மில்லியன்) அதிகம் பேரால் பார்க்கப்பட்டது!
வான்கூவர் வானொலி
இந்தியாவுக்கும் கனடாவுக்குமாகப் பறந்து பறந்து இவரின் இளமைப் பருவம் கழிந்தது. இங்கிலாந்தின் துறைமுக நகரமான வான்கூவரில் இருக்கும் அலைவரிசையில் சேனலில் ஆறு வயதிலேயே பாடியிருக்கிறார். எட்டு வயதில் மேடை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். மேலோட்டமாகப் பாடுவதில் திருப்தியடையாத அவர், அப்போதுதான் இசையைக் கவனமாக, முறையாகக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்ந்தார். இந்த முடிவுக்கு வந்தபோது அவருக்குப் பத்து வயது. கமலா போஸ், பனாரஸ் கரானா பாடுவதில் மேதையான கிரிஜாதேவி ஆகியோரிடம் நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார். பயிற்சியின் பலன் அவரது குரலில் வெளிப்பட்டது. வான்கூவரின் ரெட் எஃப்.எம். வானொலியின் சிறந்த குரலாக 2005-ல் சாஷா தேர்வானார். கடந்த ஆண்டில் வான்கூவர் வானொலி நடத்திய குரல் தேர்வுப் போட்டிக்கு நடுவராகப் பங்கெடுத்தபோது, “பத்தாண்டுகளுக்கு முன் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாஷா, இன்றைக்கு நடுவரானதற்குக் காரணம் பயிற்சிதான்” என்றார்.
தமிழுக்குத் தாவிய குரல்
பிரியதர்ஷன் 2010-ல் இந்தியில் எடுத்த ‘பம் பம் போலே’ படத்தில் பாடகியாக அறிமுகமானாலும் 2012-ல் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தில் ‘ஓட ஓட’ பாடலை ஜி.வி.பிரகாஷ் வழங்கியதன் மூலமே தமிழில் அறிமுகமுகமானார். 2013-ல் எம் டி.வி. நடத்திய கோக் ஸ்டூடியோ சீசன்-3-ல் இந்துஸ்தானி சேர்ந்திசையில் இடம்பெற்றுப் பாடியது, தமிழ், உருது, வங்காள, இந்திப் பாடல்களைப் பாடியது போன்றவற்றால் இவரைப் பல இசையமைப்பாளர்கள் கவனித்தனர். ‘கோச்சடையான்’ படத்திலும் ‘காவியத் தலைவன்’ படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பாடியதால், சாஷா வித்தியாசமான குரலைத் தேடும் இசையமைப்பாளர்களின் தேர்வாக ஆனார்.
மூன்று பாணி
துள்ளலான மெட்டு ‘காரா ஆட்டக்காரா’, தென்றலின் வருடலைப் போல் மிதமான வேகத்துப் ‘பறந்து செல்லவா’ பாடல், ஆழமான இசை ‘நானே வருகிறேன்’ நுணுக்கங்களை வெளிப்படுத்தும் பாட்டு என மூன்று விதமான பாடல்களை ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் பாடுவதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதை நினைத்து நினைத்துப் பூரித்துப்போகிறார் சாஷா. “ஒவ்வொரு நொடியையும் குழந்தையின் உற்சாகத்துடன் எதிர்கொள்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். புதிய கருவிகள், இசையில் புதிய முயற்சிகளை அவ்வளவு உற்சாகத்தோடு பாடுபவர்களுக்குச் சொல்லித்தந்து உற்சாகப்படுத்துவார்” என்று மூன்று நிமிடப் பேச்சில் இரண்டு நிமிடங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் புகழ் பாடுகிறார் சாஷா.
பத்து மொழிகளில் பாடும் வல்லமை
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், கொங்கணி, பஞ்சாபி, உருது, இந்தி, ஆங்கிலம் எனப் பத்து மொழிகளில் பாடும் திறமை பெற்றிருக்கும் சாஷாவுக்கு கசூ, மேற்கத்திய செவ்வியல் கிடார், கீபோர்ட், ஆர்மோனியம் போன்ற வாத்தியங்களை இசைக்கவும் தெரியும். 2017-ம் ஆண்டுக்கான பிளாட்டினம் மற்றும் கோல்ட் டிஸ்க்கை மிர்ச்சி ஜுப்ளிக்காகவும் 2015-ல் வளர்ந்துவரும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான மிர்ச்சி விருதையும் பெற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆல்பத்திலும் புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநரான மஜித் மஜிதியின் ‘முகமத்’ படத்திலும் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் சாஷா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago