காதில் ஏன் மெழுகு போன்ற திரவம் உருவாகிறது, இதன் பயன், அவசியம் என்ன? சாப்பிட்ட பிறகு ஏன் ஏப்பம் வருகிறது? உடலுக்கு எப்படிச் சக்தி கிடைக்கிறது, அது எந்த வடிவத்தில் இருக்கும்?... இது போன்ற மருத்துவம் சார்ந்த கேள்விகளை உங்கள் குழந்தைகள் கேட்கிறார்களா? அதற்குப் பதில் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். இது போன்ற அடிப்படை மருத்துவ அறிவைத் தருகிறது ஓர் இணையதளம்.
அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து அறிய மருத்துவர்களைத் தேடிச் செல்வதற்கு முன்பாக, குழந்தைகள் நலம் குறித்து அடிப்படைத் தகவல்களையும் இந்தத் தளம் விரிவாகத் தருகிறது.
குழந்தை நலம் குறித்த விரிவான தகவல்களைக் கொண்ட இணையதளம் http://kidshealth.org/ இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் பெற்றோர் தளம் (Parents Site), குழந்தைகள் தளம் (Kids Site), பதின்ம வயதினர் தளம் (Teens Site), பயிற்றுநர்கள் தளம் (Educators Site) எனும் நான்கு முதன்மைப் பகுதிகள் உள்ளன.
பெற்றோருக்கு
பெற்றோர் தளம் (Parents Site) என்ற பிரிவைச் சொடுக்கினால், பொது நலம் (General Health), வளர்ச்சியும் மேம்பாடும் (Growth - Development), நோய்த் தொற்றுகள் (Infections), நோய்களும் கட்டுப்பாடுகளும் (Diseases - Conditions), தாய்மையடைதலும் குழந்தையும் (Pregnancy - Baby), ஊட்டச்சத்தும் உடல் தகுதியும் (Nutrition - Fitness), உணர்ச்சிவசப்படலும் நடத்தையும் (Emotions - Behavior), பள்ளியும் குடும்ப வாழ்க்கையும் (School - Family Life), முதலுதவியும் பாதுகாப்பும் (First Aid - Safety) மருத்துவர்களும் மருத்துவமsனைகளும் (Doctors - Hospitals), உணவு செய்முறைகள் (Recipes) ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தலைப்பிலும் சொடுக்கினால், அத்தலைப்புக்குத் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. இந்தத் தகவல்கள் குழந்தைகளைப் பராமரிக்க உதவும்.
குழந்தைக்கு
குழந்தைகள் தளம் (Kids Site) எனும் முதன்மைப் பிரிவைச் சொடுக்கினால், உடல் எப்படி வேலை செய்கிறது (How the Body Works), பருவமடைதலும் வளர்த்தலும் (Puberty - Growing Up), உடல்நலம் பேணல் (Staying Healthy), உணவுச் செய்முறையும் சமைத்தலும் (Recipes - Cooking), பாதுகாப்புடன் இருப்பது (Staying Safe), உடல்நலப் பிரச்சனைகள் (Health Problems), உடல்நலக் குறைவும் காயங்களும் (Illnesses - Injuries), வளரும்போது உடல்நலப் பிரச்சினைகள் (Health Problems of Grown Ups), உதவும் மக்கள், இடங்கள், பொருட்கள் (People, Places - Things That Help), உணர்ச்சிகள் (Feelings), புதிர்கள் (Quizzes), விளையாட்டுகள் (Games), குழந்தைகள் மருத்துவ அகராதி (Kids' Medical Dictionary) எனும் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தலைப்புகளில் சொடுக்கினால், பல காணொளிகளும் (Video) உள்ளன. குழந்தைகளே இதைப் பார்த்து விஷயங்களை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
பதின்ம வயதினருக்கு
பதின்ம வயதினர் தளம் (Teens Site) எனும் முதன்மைப் பிரிவில், உடல் (Body), மனம் (Mind), பாலியல் உடல்நலம் (Sexual Health), உணவும் உடல்தகுதியும் (Food - Fitness), நோய்களும் கட்டுப்பாடுகளும் (Diseases - Conditions), நோய்த் தொற்றுகள் (Infections), பள்ளியும் பணிகளும் (School - Jobs), போதைப்பொருளும் மதுவும் (Drugs - Alcohol), பாதுகாப்புடன் இருப்பது (Staying Safe), உணவு செய்முறைகள் (Recipes) எனும் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
பயிற்றுநர்கள் தளம் (Educators Site) எனும் முதன்மைப் பிரிவில் ஆரம்பக் கல்விக்கு முந்தைய குழந்தைக் கல்வி (Pre Kinder Garden) முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு உடல்நலம் குறித்துப் பயிற்றுவிக்க வேண்டிய பாட வழிகாட்டிகள், காணொளிகள், பரிசோதனைகள் (Experiments) போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு முதன்மைப் பிரிவிலும் கேள்வி - பதில் (Q-A) எனும் தலைப்பில் பல்வேறு கேள்விகளும், பதில்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago