சிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை

By வா.ரவிக்குமார்

ஆட்டிசம் (மதியிறுக்கம்), அதிவேகச் செயல் திறன் (hyperactivity), கற்றல் குறைபாடு, டிஸ்லெக்சியா போன்ற பலதரப்பட்ட பாதிப்புகளுடன் கூடிய சிறப்பு குழந்தைகளுக்கு வர்ம மருத்துவச் சிகிச்சை மூலம் புள்ளிகளில் அழுத்தத்தைக் கொடுத்து அவர்களுடைய செயல்திறனில் அதிகபட்சம் 20 சதவீத முன்னேற்றத்தைக் காணலாம் என்கிறார் டாக்டர் ந. சண்முகம்.

கோயம்புத்தூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் கலைகளின் ஆய்வு நிறுவனத்தின் கவுரவ ஆலோசகரும் வர்ம ஆராய்ச்சியாளருமான டாக்டர் ந. சண்முகத்திடம் பயின்ற ஆயுர்வேத மருத்துவர்கள், 2010-ல் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வர்மத்தைப் பயன்படுத்தி மருந்தில்லா சிகிச்சையை அளித்துள்ளனர். 2011-ல் பனிச் சிகரங்களில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வர்ம சிகிச்சைப் பயிற்சியை டாக்டர் சண்முகமே அளித்திருக்கிறார். 600-க்கும் மேற்பட்ட வர்ம சிகிச்சை குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர், யு.ஜி.சி. நிதிநல்கை மூலம் வர்மம் பற்றி இரண்டு முறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

வர்ம சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புநிலைக் குழந்தைகளின் பெற்றோருக்கு அதைக் கற்றுத்தரவேண்டிய அவசியம் குறித்தும் ந.சண்முகம் பகிர்ந்துகொண்டார்:

வர்மத்தின் வேர்கள்

தமிழுக்கு இலக்கணம் வகுத்த நூல் தொல்காப்பியம். பழமையான அந்த நூலிலேயே வர்மம் பற்றிய குறிப்புகள் உள்ளன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு உதவும் வர்மப் புள்ளிகளை ஆய்வு செய்து பழங்காலச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு இந்தச் சிகிச்சை பயன்படும் அதேநேரம், சிறப்புநிலைக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை பலனளிக்கும்.

21 வர்மப் புள்ளிகள்

சிறப்புநிலைக் குழந்தைகளுக்கு 21 வர்மப் புள்ளிகளில் சிகிச்சை அளிக்கலாம். அதை எப்படிச் செய்ய வேண்டுமென இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கற்றுத் தருகிறோம். இந்த அடிப்படையில் குறைந்தது 3 ஆயிரம் சிறப்புநிலைக் குழந்தைகளின் தமிழகப் பெற்றோர்களுக்கு இலவச வர்ம சிகிச்சை முறைகளைக் கற்றுத் தர திட்டமிட்டிருக்கிறோம். நம்முடைய விரல்களின் எந்தப் பகுதியை எந்த வர்மப் புள்ளியில் பதித்து எப்படிப்பட்ட கால இடைவெளியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நேரடியாகக் கற்றுத் தருவதுதான் இந்த முகாமின் சிறப்பு.

சிறப்புநிலைக் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக அலோபதி, ஆயுர்வேதம், சித்தா இப்படி எந்த மருத்துவ முறையில் சிகிச்சையைப் பின்பற்றி வந்தாலும், அதை அப்படியே தொடரலாம். அந்தச் சிகிச்சையுடன், வர்மப் புள்ளிகள் சார்ந்து நாங்கள் அளிக்கும் பயிற்சியையும் குழந்தை களுக்குச் சேர்த்துச் செய்ய அறிவுறுத்துகிறோம்.

ஞாபகத் திறன் மேம்பட

ஒரு கவுளி வெற்றிலையின் அளவு என்பது, ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வெற்றிலையை வைக்கக்கூடிய அளவு. இந்தப் பகுதியில் அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பெயர் கவுளிக் காலம். ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் நம்முடைய கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களின் முனையை விட்டுவிட்டு அழுத்தி அளிக்கும் சிகிச்சை இது. இதன் மூலம் ஞாபகத் திறன், செயல் திறன் மேம்படும்.

உடல் சிறப்பாக இயங்க

தோள்பட்டை எலும்பும் காரை எலும்பும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் குழிவான பகுதி இது. இந்தப் பகுதியில் இரண்டு கைகளிலும் நடு மூன்று விரல்களைக் கொண்டு செய்யப்படும் மிதமான உட்புற, வெளிப்புற அழுத்த சுற்றுகளின் மூலம், சுவாசத்தை உள்ளிழுக்கும் திறன் ஒருவருக்கு அதிகரிக்கும். உடலின் எல்லாப் பாகங்களும் சிறப்பாக இயங்குவதற்கு இந்த வர்மம் உதவும்.

வர்மப் பயிற்சி முகாம்

கலைகளின் ஆய்வு நிறுவனம், திருமூலர் வர்மம் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து சென்னையில் சிறப்புநிலைக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இலவச வர்ம சிகிச்சை பயிற்சி முகாமை கடந்த ஞாயிறன்று நடத்தின. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கவுள்ள முகாம்களில் முதல் முகாம் இது. ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். இதேபோன்று, சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான இலவச வர்மசிகிச்சை பயிற்சி முகாம் அடுத்ததாக நாகர்கோவிலில் ஏப்ரல் 24 அன்று வெட்டூருணிமடம் `தி பயோனியர்’ பள்ளி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்