பல் மருத்துவத்தில் இந்தியாவின் ஆற்றல்மிக்க நேவிகேஷன் அமைப்பை உருவாக்க இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்துடன் சவீதா பல் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையொப்பமிட்டுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் பல் மருத்துவத்தில் நேவிகேஷன் அமைப்பைக் கொண்டுள்ள முதல் பல் மருத்துவ நிறுவனமாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி மாறும். சிமட்ஸின் நிறுவனர் மற்றும் அதிபர் என்.எம்.வீரையன், சிமட்ஸின் கல்வி இயக்குநர் தீபக் நல்லசாமி ஆகியோரின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி டிஜிட்டல் முறையில் இந்த ஆற்றல்மிக்க நேவிகேஷன் அமைப்பைத் தொடங்கிவைத்தார்.
"பல் மருத்துவத்தில் தனித்துவமான வழிசெலுத்தல் முறை மிகவும் குறைவாகவே உள்ளது. சவீதாவின் நேவிகேஷன் அமைப்புக்கான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே இருக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், நடைமுறைகளுக்கும் வலுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல் மருத்துவத்தில் ஆற்றல்மிக்க நேவிகேஷன் அமைப்பை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஒரு பல் மருத்துவக் கல்லூரி தன்னை ஈடுபடுத்தி இருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை.
» புதுச்சேரியில் 264 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு
» பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு எப்போது?- முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
இந்த அமைப்பின் பயன்பாடுகள் ஏராளமானவை: மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை முறைகளிலும் எண்டோடோன்டிக் நடைமுறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், பல் உள்வைப்பு ஆய்வில் இது பெரிதும் பயன்படுகிறது.
கட்டிகள் அகற்றுவது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளில் இந்த நேவிகேஷன் மிகவும் நன்மை பயக்கும். முழுக் காயத்தையும் துல்லியமாக அகற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு இது வழிகாட்டுகிறது" என்கிறார், சிமட்ஸின் கல்வி இயக்குநர் தீபக் நல்லசாமி.
"டைனமிக் நேவிகேஷன் அமைப்பு கடினமான நடைமுறைகளின் சிக்கலான விகிதங்களை வெகுவாகக் குறைக்கிறது. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல் உள்வைப்பு மையத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியுடன் தொடங்கும். பின்பு மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சைகள் போன்ற பிற துறைகளிலும் விரிவடையும்" என, சிமட்ஸ் நிறுவனர் மற்றும் அதிபர் என்.எம்.வீரையன் கூறினார்.
கோணம், ஆழம், இருப்பிடம், அளவு ஆகியவற்றின் அடிப்படையில், அறுவை சிகிச்சை, மெய் நிகர் உள்வைப்பு ஆகியவற்றின் இடத்தைத் திட்டமிட டைனமிக் நேவிகேஷன் அமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவும். இதனால், அறுவை சிகிச்சையை நன்கு திட்டமிட முடியும். ஃப்ரீ ஹேண்ட் அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படும் பல் உள்வைப்பை ஒப்பிடும்போது இந்த ஆற்றல்மிக்க நேவிகேஷன் அமைப்பைப் பயன்படுத்தி பல் உள்வைப்பைச் செயல்படுத்துவது மிகவும் துல்லியமாக இருக்கும்.
டைனமிக் நேவிகேஷன் அமைப்பின் முன்னேற்றங்கள்
சி.டி. ஸ்கேனிங், திட்டமிடல், அறுவை சிகிச்சை ஆகியவை மருத்துவரைச் சந்திக்கும் ஒரே சந்திப்பில் சாத்தியமாகும்.
நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும். தொற்றுநோய்க்கான ஆபத்து குறைகிறது, நோயாளிகள் விரைவாக குணமடைய உதவுகிறது.
இந்த அமைப்பின் எந்த நேரத்திலும் வழிகாட்டுதல் துல்லியத்தைச் சரிபார்க்கும் திறன் காரணமாக அதிக பாதுகாப்பும் முன் கணிப்பும் கைகூடுகிறது.
திட்டமிடல் எளிமையானதாகவும் வேகமானதாகவும் மாறுகிறது.
அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை திட்டத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். தேவைப்பட்டால் மாற்ற முடியும்.
சிகிச்சையின் செலவு வெகுவாகக் குறையும்.
அதிக வெப்பத்தால் எலும்பு சேதமடையும் அபாயம் குறைகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago