கரோனாவுக்குப் பிந்தைய உதவி

By வா.ரவிக்குமார்

சென்னையில் ஊரடங்கின் பலனாக கரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையைவிட நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இப்படி குணமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் தொலைபேசிவழி மருத்துவர்களை நாடும் உதவிகளை நகரின் 15 மண்டலங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்னை மாநகராட்சி வழங்குகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:

“கரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதுடன், அவர்களைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குக் கண்காணிக்கிறோம். பொதுவாக ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்குச் சென்று இரண்டிலிருந்து மூன்று வாரம் சிகிச்சை பெற்றவுடன் கரோனா பாதிப்பு குறைந்துவிடும். அப்படியும் பாதிப்பு குறையாதவர்களின் பிரச்சினைகளை எங்களின் தன்னார்வலர்கள் தொடர்ந்து கவனித்து அவர்களுக்குத் தேவைப்படும் உளவியல் சார்ந்த விழிப்புணர்வை நிபுணர்களைக் கொண்டு அளிக்கின்றனர்.

மருத்துவம் சார்ந்த உதவிகளையும் உடனுக்குடன் அளிப்பார்கள். வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களும் மாநகராட்சியின் உதவியைப் பெறலாம். உதவி தேவைப்படுவோர் 94980 15100 / 94980 15200 / 94980 15300 / 94980 15400 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

94983 46510/11/12/13/14 ஆகிய வாட்ஸ் அப் எண்களுக்கும் தொடர்புகொள்ளலாம். உளவியல் சார்ந்த உதவிகளைப் பெறுவதற்கு 044-46122300 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி துணை ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்