கால்-கை வலிப்பு எனும் நரம்பியல் பிரச்சினையால் உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது.
இன்று உலக வலிப்பு விழிப்புணர்வு நாள். கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு என்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து திருச்சியைச் சேர்ந்த மூளை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணரும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மூளை, நரம்பியல் துறையின் முன்னாள் தலைவருமான டாக்டர் எம்.ஏ.அலீமிடம் கேட்டோம்.
வலிப்பு என்பது நோயா? யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்? குழந்தைகளுக்கும் வருமா?
உலகில் ஆயிரம் பேரில் 4 முதல் 10 பேருக்கு வலிப்பு இருக்கிறது. வலிப்பு என்பது நோயல்ல. நோயின் அறிகுறி. சிலருக்கு மூளையில் உள்ள திசுக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதால் வலிப்பு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படும்போது வலிப்பு ஏற்படலாம். மூளையில் ஏற்படக்கூடிய கட்டிகள், மூளைத் திசுக்களைத் தாக்கும் கிருமிகள், மூளைக் காயங்கள், மூளைத் திசுக்கள் சிதைவதால் ஏற்படும் பாதிப்புகள், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு போன்றவற்றால் வலிப்பு ஏற்படலாம். மதுப் பழக்கம் மூலம் ஏற்படும் தலைக்காயங்கள், மூளையில் ஏற்படும் ரத்தக்குழாய் மாற்றங்களாலும் வலிப்பு ஏற்படலாம்.
பிறவியிலேயே மூளையில் பிரச்சினை உள்ள குழந்தைகள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும்கூட வலிப்பு பாதிப்புக்கு ஆளாகலாம். பிறந்ததிலிருந்து 2 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கிருமித் தொற்று மூளையைத் தாக்கும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு வரும். குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை, கால்சியம், மக்னீசியம், ‘பிரீடாக்சின்’ போன்ற சத்துக்குறைவு காரணமாகவும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு பாதிப்பில் முடியலாம்.
சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது வலிப்பு வருவதைப் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு ஏற்படுகிறது. இதை ‘பெப்ரைல் பிட்ஸ்’ என்று சொல்வார்கள். 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமான காய்ச்சல் குழந்தைகளைத் தாக்கும்போது வலிப்பு ஏற்படலாம். காய்ச்சல் காரணமாக வரும் வலிப்பு சில நிமிடங்களில் மட்டுப்பட்டுவிடும்.
கால்- கை வலிப்பு உள்ளவர்களுக்கு கோவிட்-19 பாதிப்புக்கான அதிக ஆபத்துள்ளதா?
பொதுவாக பொதுமக்களோடு ஒப்பிடும்போது கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு தொற்றுக்கான அதிக ஆபத்து இருப்பதற்கான சான்று எதுவும் தற்போது இல்லை. வேறு ஏதாவது சுகாதாரப் பிரச்சினை இல்லாமல் மருந்து எடுப்பதால் வலிப்பு வராதவர்கள் அல்லது எப்போதாவது வலிப்பால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு அதிக ஆபத்து இல்லை.
கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு கோவிட்-19ஆல் சிக்கல் அதிகமாகும் ஆபத்துள்ளதா?
செயலற்ற நோய்த்தடுப்பு மண்டலம் கொண்டவர்கள் அல்லது தற்போது மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிக்கல் ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. யுஎஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) நீடித்த நரம்புக் கோளாறாக இருப்பதால் கால்-கை வலிப்பைக் கடுமையான கோவிட் தொற்றை அதிகரிக்கும் கோளாறுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
கால்-கை வலிப்புள்ள ஒருவருக்கு கோவிட்- 19 தொற்று ஏற்பட்டால் வலிப்புநோய் மோசமான நிலையை அடையுமா அல்லது இன்னும் அடிக்கடி ஏற்படுமா?
பெரும்பாலான வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் வலிப்புகள் மோசமான நிலையை அடையும் ஆபத்து அதிகரிக்கும் என இதுவரை எந்தத் தகவலும் கூறவில்லை.
எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது கால்-கை வலிப்பைத் தூண்டுமா?
வாய்ப்புள்ளது. கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதில் குறிப்பாக அதிக காய்ச்சல் இருந்தால் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. கால்- கை வலிப்பு இல்லாதவர்களை கரோனா வைரஸ் பாதித்தால் அது நேரடியாக மூளையைத் தாக்கினால் புதிதாக வலிப்பு வரலாம். கரோனா வைரஸ் பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும் வலிப்பு வரலாம்.
எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது கால்-கை வலிப்பைத் தூண்டுமா?
கால்-கை வலிப்புள்ள சிலருக்கு ஒரு நோய் இருந்தால் குறிப்பாக அதிக காய்ச்சல் இருந்தால் வலிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. கரோனா வைரஸுக்குக் காய்ச்சல் ஒரு அறிகுறியாகும். ஆகவே, கால்-கை வலிப்புள்ள சிலருக்கு இது வலிப்பைத் தூண்டலாம்.
கால்-கை வலிப்புள்ளவர்களுக்கு முகக்கவசம் பாதுகாப்பானதா?
கால்-கை வலிப்புள்ளவர்களில் பெரும்பாலானருக்குத் துணி முகக்கவசம் அணிவது பாதுகாப்பானதே. சுவாசிக்கத் தக்க பொருளாலான முகக்கவசத்தை ஒருவர் வலிப்பின்போது அணிந்திருந்தாலும் எந்தத் தீங்கும் ஏற்படாது. முகக்கவசம் தங்களை மிகையாக வெப்பப்படுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வதனால் கவலைப்படுவதாக சிலர் எங்களிடம் கூறி இருக்கிறார்கள். பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சுவாசிக்கும் பொருட்களால் தயாரிக்கப்படட் முகக்கவச வகையால் இத்தகைய பிரச்சினை ஏற்பட்டதற்கான சான்று எதுவுமில்லை
நோய்த் தடுப்பு மண்டலம் சரியாகச் செயல்படுவதை கால்-கை வலிப்பு மருத்து தடுக்கிறதா?
வலிப்பு சிகிச்சைகளுக்குப் பயன்படும் வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் என அழைக்கப்படும் தரமான மருந்துகள் நோய்த்தடுப்பு மண்டலத்தைத் தடைப்படுத்துவதில்லை.
என் குழந்தைக்கு கால்-கை வலிப்பு இருக்கிறது. அதிக ஆபத்துள்ளதா?
உங்கள் குழந்தைக்கு வேறு ஏதாவது சுகாதாரப் பிரச்சினை இல்லாமல் வலிப்பு மட்டுமே இருந்தால் கரோனா வைரஸால் அதிக ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago