கரோனா வைரஸ் மரபணுவைக் கண்டுபிடிக்கும் ‘ஆர்.டி.–பி.சி.ஆர்.’ பரிசோதனைக்கு (RT-PCR Test) மாற்றாக ‘ஃபெலுடா’ பரிசோதனை (Feluda Test) வந்திருக்கிறது. வங்கத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய்க்கு மரியாதை செய்யும் விதமாக அவரது படைப்புகளில் வரும் துப்பறிவாளர் கதாபாத்திரம் ‘ஃபெலுடா’வின் பெயரைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், ‘FNCAS9 Editor Linked Uniform Detection Assay’ எனும் சொற்றொடரின் முதல் எழுத்துச் சேர்க்கையையும் இது குறிக்கிறது. இந்தியாவில் CSIR, IGIB ஆய்வாளர்கள் சௌவிக் மெய்தி, தீபஜோதி சக்ரவர்த்தி ஆகியோர் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
CRISPR தொழில்நுட்பத்தில் செயல்படும் இப்பரிசோதனையின் முதல்படியாக, தொற்றாளரின் மூக்கு - தொண்டையிலிருந்து சளியைச் சேகரிக்கின்றனர். சில நொதிகளின் உதவியுடன் அதிலிருந்து கரோனா மரபணுவான ஆர்.என்.ஏ.வைப் பிரிக்கின்றனர். அவற்றுடன் ‘ரிவெர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்’ (Reverse transcriptase) எனும் நொதியைக் கலக்கின்றனர். இது, ஆர்.என்.ஏ.க்களை சி.டி.என்.ஏ.(cDNA)க்களாக மாற்றிவிடுகிறது. அவற்றை ‘ஆர்.டி.–பி.சி.ஆர்.’ கருவிக்குள் செலுத்துகின்றனர். அது, சி.டி.என்.ஏ.க்களைக் கோடிக்கணக்கில் நகல் எடுத்தும், விஸ்வரூபம் எடுக்கவைத்தும் காண்பிக்கிறது. இதுவரை ‘ஆர்.டி.–பி.சி.ஆர்.’ பரிசோதனைக்கான படிநிலைகளைத்தான் இதிலும் பின்பற்றுகின்றனர்.
அடுத்த படிநிலைதான் புதிது. ‘ஃபெலுடா’ திரவக் கலவையில் சி.டி.என்.ஏ.க்களைக் கலக்குகின்றனர். இதிலுள்ள ‘கேஸ்9’ (Cas9) புரதம் கரோனா கிருமியின் மரபணுவுடன் இணைவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இது சி.டி.என்.ஏ.க்களுடன் இணைந்து புதிய கூட்டுக் கலவையை உருவாக்குகிறது. இதிலிருந்து சில சொட்டுகளை எடுத்து வேதிப்பூச்சுள்ள பேப்பர் பட்டையில் விட்டால் அதில் பார்கோடுபோல் கோடுகள் தோன்றும். ஒரு கோடு மட்டும் தெரிந்தால் அதில் கரோனா வைரஸ் இல்லை; இரண்டு கோடுகள் தெரிந்தால் வைரஸ் இருக்கிறது என்று பொருள்.
கர்ப்பத்தை உறுதிசெய்யும் பட்டைப் பரிசோதனையைப் போன்றதுதான் இது. ஆனால், வீட்டில் இதை மேற்கொள்ள முடியாது. இது 99 சதவீதம் துல்லியமானது; எளிமையானது; முக்கால் மணி நேரத்தில் இதன் முடிவு தெரிந்துவிடும்; செலவு குறைவு ஆகியவை இந்தப் பரிசோதனையில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள். இது இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது. இதை டாட்டா சன்ஸ் நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago